Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹிட்மேனுக்கு இந்த நிலைமையா.. படுமோசமான சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த ரோஹித் சர்மா

மெல்போர்ன்: 2024 ஆம் ஆண்டு முடிவை எட்டப் போகும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் படு மோசமான சாதனையை செய்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம் பெற்று இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்த வீரர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்த வீரர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ind vs aus year ender 2024 india vs australia test match vs

இந்தப் பட்டியலில் நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் 2024 ஆம் ஆண்டில் 13 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தார். அவர் வேகப் பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் பின்வரிசையில் பேட்டிங் இறங்கி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறார். அவர் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் இடம் பெற்று இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த அவர் 11 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

மூன்றாவது இடத்தில் ஐந்து வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் இந்த ஆண்டு 10 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பும்ராவும் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். அவரும் 2024 ஆம் ஆண்டில் பத்து முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

வங்கதேசத்தின் ஹசன் மஹ்மூத் மற்றும் இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் ஆகியோரும் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் 10 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து உள்ளனர்.

கடைசியாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-உம் இந்தப் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த ஆண்டு அவருக்கு மோசமான ஆண்டாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவர் சரியாக ரன் குவிக்காததுடன், பலமுறை காயங்களிலும் சிக்கினார். அவரும் பத்து முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

Story first published: Saturday, December 28, 2024, 14:09 [IST]
Other articles published on Dec 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+