For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: அடப்பாவிகளா கல்யாண மாப்பிள்ளையை தூக்கிட்டு வந்து ஆட வச்சீங்களா? முகேஷ் குமாரின் அர்ப்பணிப்பு

கவுஹாத்தி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முகேஷ் குமார் நீக்கப்பட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய சிறப்பாக பந்து வீசி நம்பிக்கை அளித்து இருந்தார் முகேஷ் குமார்.

முதல் போட்டியில் 4 ஓவர்களில் குறைவாக 29 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்த போதும் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு திருப்பம் ஏற்படுத்தி கொடுத்தார்.

IND vs AUS : Mukesh Kumar went for his marriage says Suryakumar Yadav

இந்த நிலையில் அவர் மூன்றாவது டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்தியா தவறான முடிவை எடுத்து விட்டதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், முகேஷ் குமார் திருமணத்தின் காரணமாக சென்றுள்ளார் எனக் கூறிய போது அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

முகேஷ் குமாருக்கு திருமணம் என்ற தகவலே வெளியே தெரியவில்லை என்பதால் அனைவருக்கும் இந்த தகவல் பெரும் வியப்பாகவும் இருந்தது. அதே சமயம், கல்யாண மாப்பிளையை அழைத்து வந்து இந்திய அணி ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஆட வைத்துள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

தன் சொந்த கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளும் முகேஷ் குமார், நான்காவது டி20 போட்டிக்கு முன் அணியுடன் இணைவார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகேஷ் குமார் நீண்ட காலமாக இந்திய அணியில் தன் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் திருமணத்துக்காக இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மூன்றாவது டி20 போட்டியில் முகேஷ் குமாருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதே சமயம் ஐந்தாவது டி20 போட்டிக்கு கூடுதல் பந்துவீச்சாளராக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 28, 2023, 19:40 [IST]
Other articles published on Nov 28, 2023
English summary
IND vs AUS : Mukesh Kumar went for his marriage says Indian team captain Suryakumar Yadav.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+