For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!

பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டியில் நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினர்.

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இளம் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்று ஆடி வருகின்றனர்.

அதில் அறிமுகப் போட்டியில் ஆடும் தமிழக வீரர்களான நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 1 - 1 என இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சமநிலையில் இருந்தன. கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் பெரும் பரபரப்பு இருந்தது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அதே சமயம், இந்திய அணியில் அனைத்து அனுபவ டெஸ்ட் பந்துவீச்சாளர்களும் காயத்தால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தனர். எனவே, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் என டெஸ்ட் அனுபவம் இல்லாத வீரர்கள் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர்.

சதம்

சதம்

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் வார்னரை முகமது சிராஜ் 1 ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ்-ஐ தாக்குரும் வெளியேற்றினர். பின் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வாஷிங்க்டன் சுந்தர் சாய்த்தார். லாபுஷாக்னே சதம் அடித்தார்.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

அதன் பின் நடராஜன், சுந்தர் விக்கெட் எடுக்கத் துவங்கினர். லாபுஷாக்னே, மேத்யூ வேட், ஹேசல்வுட் விக்கெட்களை நடராஜன் வீழ்த்தினார். சுந்தர் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் தவிர்த்து, கேமரூன் கிரீன், நாதன் லியோன் வீழ்ந்தனர்.

ஆஸ்திரேலியா ஸ்கோர்

ஆஸ்திரேலியா ஸ்கோர்

50 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Story first published: Saturday, January 16, 2021, 15:53 [IST]
Other articles published on Jan 16, 2021
English summary
IND vs AUS : Natarajan, Washington Sundar helps ruled out Australia by 369 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+