Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டார்கெட் செய்த ஆஸி. ஜோடி.. யார்க்கர் போட்டும் வேஸ்ட்.. திணறிய தமிழக வீரர்.. பதறிய கோலி!

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 3வது ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன நடராஜன் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களிடம் சிக்கித் தவித்தார்.

நடராஜன் முதல் 6 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். ஆனால், அடுத்த இரு ஓவர்களில் ரன்களை வாரி இறைத்தார்.

அப்போது கேப்டன் விராட் கோலி வெற்றி கையை மீறி போய் விடுமோ என பதறினார்.

நடராஜன் அறிமுகம்

நடராஜன் அறிமுகம்

இந்திய ஒருநாள் அணியில் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் ஒருநாள் அணியில் கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தாலும், இந்திய அணி தொடரை இழந்த நிலையில், புதிய வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 302 ரன்கள் குவித்தது. கோலி 63, ஹர்திக் பாண்டியா 92, ஜடேஜா 66 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி 303 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. வார்னர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை.

முதல் பவர்பிளே விக்கெட்

முதல் பவர்பிளே விக்கெட்

மார்னஸ் லாபுஷாக்னே துவக்க வீரராக களமிறங்கினார். அவரது விக்கெட்டை 6வது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்தினார் நடராஜன். இந்த ஒருநாள் தொடரில் பவர்பிளே ஓவர்களில் இந்தியா எடுத்த முதல் விக்கெட் இதுதான்.

யார்க்கர் பவுலிங்

யார்க்கர் பவுலிங்

நடராஜன் இந்தப் போட்டியில் தன் யார்க்கர் ஆயுதத்தை தான் அதிகம் பயன்படுத்தினார். முதல் 6 ஓவர்களில் அவர் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அப்போதே அவரது இடம் இந்திய அணியில் உறுதி செய்யப்பட்டு விடும் என்ற பேச்சு எழுந்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

அடுத்து அவர் கடைசி சில ஓவர்களில் வீசிய போது தடுமாறினார். மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர் ஜோடி ஆஸ்திரேலிய அணியை கரை சேர்க்க போராடினர். நடராஜன் ஓவர்களை குறி வைத்து அடித்தனர். 40வது ஓவரில் 14 ரன்களும், 44வது ஓவரில் 18 ரன்களும் கொடுத்தார்.

2 விக்கெட்

2 விக்கெட்

எனினும், 48வது ஓவரில் களத்தில் இருந்த ஒரே அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஆஷ்டன் அகர் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். இரண்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு தேவையான நேரங்களில் திருப்புமுனை அளித்தார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக ரன்கள் கொடுத்தது நடராஜன் தான். 10 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்களில் நடராஜனுக்கு அடுத்து ஜடேஜா அதிகபட்சமாக 62 ரன்கள் கொடுத்தார்.

ஈர்த்தார்

ஈர்த்தார்

முதல் சர்வதேச போட்டி என்பதால் நடராஜன் சிறிய அளவில் தடுமாறினார். எனினும், பின் சமாளித்து 2 விக்கெட்கள் வீழ்த்தி மீண்டு வந்தார். முதல் போட்டியில் அவரது பந்துவீச்சு பலரையும் கவர்ந்துள்ளது. அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, December 2, 2020, 19:51 [IST]
Other articles published on Dec 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+