Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர்.. கடைசி நேர ட்விஸ்ட்.. இதுதான் காரணமா? பரபர தகவல்

சிட்னி : தமிழக வீரர் நடராஜன் இந்திய உத்தேச ஒருநாள் அணியில் மாற்று வீரராக முதல் ஒருநாள் போட்டி துவங்கும் முன் சேர்க்கப்பட்டார்.

எனினும், அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. நவ்தீப் சைனிக்கு முதுகில் வலி இருப்பதால் நடராஜன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டார்.

ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் நவ்தீப் சைனி களமிறங்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழக வீரர் நடராஜன்

தமிழக வீரர் நடராஜன்

தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் 2020 ஐபிஎல் தொடரில் தன் யார்க்கர் பந்துவீச்சால் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு தேடி வந்தது. இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா சென்றார் அவர்.

நவ்தீப் சைனி

நவ்தீப் சைனி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடர் துவங்க இருந்த நிலையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு முதுகில் வலி இருப்பதாக கூறப்பட்டது. இதை அடுத்து அவரால் போட்டிகளில் ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஒருநாள் அணியில் சேர்ப்பு

ஒருநாள் அணியில் சேர்ப்பு

ஒருநாள் அணியில் கூடுதல் வீரராக நடராஜனுக்கு இடம் கிடைத்தது. அவர் போட்டிகளில் ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்திய அணியில் ஷமி, பும்ரா, ஷர்துல் தாக்குர் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

இந்த நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் நவ்தீப் சைனிக்கு இடம் அளித்து ஆச்சரியம் அளித்தார் கேப்டன் கோலி. நடராஜனுக்கு முதல் போட்டியில் களமிறங்கிய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஷமி, பும்ரா, சைனி வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர்.

எப்படி சைனி ஆடுகிறார்?

எப்படி சைனி ஆடுகிறார்?

நவ்தீப் சைனிக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டதா? எப்படி அவரை முதல் போட்டியில் கேப்டன் கோலி களமிறக்கினார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சைனி டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் வாய்ப்பு?

அடுத்த போட்டியில் வாய்ப்பு?

டெஸ்ட் அணி வீரர்கள் சுழற்சி முறையில் தான் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பயன்படுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் சைனிக்கு அடுத்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு நடராஜன் அணியில் வாய்ப்பு பெறக்கூடும்.

இந்திய அணி

இந்திய அணி

முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி - ஷிகர் தவான், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

Story first published: Friday, November 27, 2020, 10:29 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+