Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரர்களால் கூட முடியலை.. ஆனால் இவர்.. தமிழக வீரரை தூக்கி வைத்து கொண்டாடிய நிக் நைட்!

பிரிஸ்பேன் : தன் அறிமுகப் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரைசதம் அடித்து இருக்கிறார் வாஷிங்க்டன் சுந்தர்.

அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் துவக்க வீரர் நிக் நைட் அவரது ஆட்டத்தை புகழ்ந்து இருக்கிறார்.

ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா ஆகியோருடன் ஒப்பிட்டு அவரது ஆட்டத்தை பற்றி கூறி இருக்கிறார் அவர்.

கூட்டணி

கூட்டணி

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது வாஷிங்க்டன் சுந்தர் - ஷர்துல் தாக்குர் ஜோடி சேர்ந்து ஏழாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர்.

அரைசதம்

அரைசதம்

ஷர்துல் தாக்குர் 67, சுந்தர் 62 ரன்கள் குவித்தனர். பின்வரிசை வீரரான தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர் என்பதால் அவரது ஆட்டம் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், சுந்தர் ஆல்-ரவுண்டராக, முதல் தர போட்டி அனுபவமே இல்லாமல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் ஆட்டம் ஆடி இருந்தார்.

வியப்பில் ஆழ்த்தியது

வியப்பில் ஆழ்த்தியது

அது பற்றி பேசிய நிக் நைட், "அவரின் டெக்னிக்கை விட போட்டி சூழ்நிலையை அறிந்து அவர் ஆடியது தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. சுந்தர் 20 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தால் நாம் அவரை கேள்வியே கேட்டு இருக்க மாட்டோம். ஏனெனில், அவருக்கு இது அறிமுகப் போட்டி. மேலும், முதல் தர போட்டிகளில் அவர் அதிகம் ஆடவில்லை" என்றார்.

அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

"சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, ரஹானே, புஜாரா எப்படி ஆட்டமிழந்தார்கள் என்பதையும் பாருங்கள். இவர் எப்படி போட்டியில் தன்னை செயல்படுத்தி ஆடினார் என்பதையும் பாருங்கள். இந்த சூழ்நிலையில் அவர் இத்தனை அர்ப்பணிப்புடன் ஆடியது தான் என்னை ஈர்த்தது" என்றார் நிக் நைட்.

Story first published: Sunday, January 17, 2021, 17:07 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+