மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் புதிய ஹீரோவாக தற்போது உருவெடுத்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த 21 வயது வீரரான நிதிஷ்குமார் ரெட்டி ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கி தன்னுடைய ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்து இருக்கிறார்.
நிதிஷ்குமார் ரெட்டி இந்திய டி20 அணியிலும் அறிமுகமாகி பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்த சூழலில் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய டெஸ்ட் அணியில் புதிய ஆல் ரவுண்டராக இடம்பெற்று நடப்பு தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

இதில் பேட்டிங்கில் பெர்த் மற்றும் அடிலெய்ட் டெஸ்டில் இந்தியாவுக்காக முக்கிய ரன்களை அடித்திருந்தார். இந்த சூழலில் நிதிஷ் குமார் ரெட்டியை நீக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், பேட்டிங்கில் இக்கட்டான நிலையில் களமிறங்கி சதம் அடித்து அசத்தினார்.
கிரிக்கெட் உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய சாதனைகளை கொண்டாடுவார்கள். சதம் அடித்த பிறகு விராட் கோலியின் கொண்டாட்டம் வித்தியாசமாக இருக்கும். கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் தங்களுடைய சதத்தை கொண்டாடுவதே தனி ஸ்டைலாக மாறிவிட்டது.
சுப்மன் கில், சதம் அடித்து விட்டு பேட்டை ஒரு கையில் வைத்துக்கொண்டு அழகாக பார்வையாளர்களை பார்த்து தலை வணங்குவார். இப்படி ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றும் நிலையில் இன்று நிதிஷ்குமார் சதம் அடித்து வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.
பேட்டை வைத்து அதன் மேல் தன்னுடைய ஹெல்மெட்டை வைத்து ஒரு கால் முட்டி போட்டு நிதிஷ் குமார் சல்யூட் அடித்தார். இதனை பலரும் இது பாகுபலி கொண்டாட்டம் என்று கூறினார்கள். காரணம் அவர் அரைசதம் அடித்து விட்டு புஷ்பா போல் செய்துதால் சதம் அடித்து விட்டு பாகுபலி நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடினார் என்று கூறினர்.
ஆனால் நிதிஷ்குமார் செய்தது முற்றிலும் வித்தியாசமானது
இது குறித்து நிதிஷ்குமார், தற்போது தன்னுடைய கொண்டாட்ட ஸ்டைலின் பின்னணி குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், நான் சதம் அடித்து என்னுடைய பேட்டை வைத்து அதன் மீது ஹெல்மெட்டை வைத்தேன். ஏனென்றால் என்னுடைய ஹெல்மெட்டில் நமது நாட்டின் தேசியக்கொடி இருக்கும்.
அந்த தேசியக் கொடியை சலீயூட் அடிக்கும் விதமாகத்தான் நான் இதை செய்தேன். இதற்கு காரணம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. இந்த சதம் என்றென்றும் என் மனதில் நினைத்து நிற்கும் என்று நிதீஷ் குமார் ரெட்டி கூறினார். நிதிஷ்குமார் ரெட்டியின் கொண்டாட்டம் ராணுவ வீரர்களின் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாகும். ராணுவ வீரர்கள் மரியாதை கொடுக்கும்போது இதே ஸ்டைலில் தங்களுடைய துப்பாக்கியில் ஹெல்மெட்டை மாட்டி கொண்டு வணங்குவார்கள். அதை தான் தற்போது நிதீஷ்குமார் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.