Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங்கில் சொதப்பினாலும், பவுலிங்கில் கெத்து காட்டிய அஸ்வின்.. முதல் தேர்வில் பாஸ்

சென்னை : இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் அஸ்வின் பயிற்சி செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடினார்.

சென்னையில் உள்ள எஸ் எஸ் என் கல்லூரியில் நடைபெற்ற விஏபி கோப்பை தொடரில் மயிலாப்பூர் அணிக்காக களமிறங்கிய அஸ்வின் யங் ஸ்டார்ஸ் அணியுடன் பலப் பரிட்சை நடத்தினார்.இதில் மயிலாப்பூர் அணி 38 ஓவர் முடிவில் 192 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது களத்திற்கு அஸ்வின் பேட்டிங் செய்ய வந்தார். 17 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின் 12 ரன்கள் அடித்து இருந்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

R Ashwin

அஸ்வின் அடித்த 12 ரன்கள் அனைத்தும் ஓடியே எடுக்கப்பட்டவை. இதில் பவுண்டரி கிடைக்கவில்லை. இதனை அடுத்து 50 ஓவர் முடிவில் அஸ்வின் அணி 285 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து யங் ஸ்டார் அணி பேட்டிங் செய்தது. இதில் அஸ்வின் பந்துவீச்சு எப்படி செயல்பட போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஓவர் போட்டிகளில் விளையாடும் அஸ்வின் வழக்கம்போல் ரன்களை கட்டுப்படுத்தி ஒரு முனையில் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

இதன் மூலம் அஸ்வின் பத்து ஓவர் வீசி வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் யங் ஸ்டார் அணி 257 ரன்களில் 48 ஓவரில் எல்லாம் அனைத்து விக்கெட் களையும் இழந்தது. அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்த தீரன் என்பவர் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் மயிலாப்பூர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மயிலாப்பூர் அணியின் பயிற்சியாளர் குரு கேதார்நாத் , அஸ்வின் குறித்து வெகுவாக பாராட்டினார். இது குறித்து பேசிய அவர் அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அதில் எந்த கேள்வியும் சந்தேகமும் வேண்டாம் என்றார். அவர் பந்து வீசும் போது பந்தை சரியான கட்டுப்பாட்டுடன் வீசினார். அது பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது என்று பாராட்டினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மொஹாலியில் நடைபெறுகிறது. இதனை அடுத்து 24 ஆம் தேதி இந்தூரில் இரண்டாவது போட்டியும், ராஜ்காட்டில் 27ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

Story first published: Wednesday, September 20, 2023, 0:40 [IST]
Other articles published on Sep 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+