Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த திமிர் மட்டும் ஆஸி. வீரர்கள் கிட்ட போகாது.. சிராஜ் தொடர்பான கேள்விக்கு கம்மின்ஸ் பதில்

மொஹாலி : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று பாடல் வரிகளை கேட்டிருப்போம். அதேபோல் கிரிக்கெட் விளையாட்டு உலகிலே திமிர் பிடித்த வீரர்கள் யார் என்று கேட்டால் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட ஆஸ்திரேலியா தான் என்று சரியாக பதில் சொல்வார்கள்.

காரணம் கிரிக்கெட்டில் நாங்கள் தான் கெத்து மற்றவர்கள் எல்லாம் வெத்து என்ற தலைக்கனத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் செயல்படுவார்கள். குறிப்பாக வேக பந்துவீச்சு என்றாலே ஆஸ்திரேலியா அதில் சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள்.

Ind vs aus odi series - Pat cummins gives single word answer on Mohammed siraj

இந்த நிலையில் உலகின் முதல் நிலை பவுலராக முஹமது சிராஜ் அண்மையில் உருவெடுத்தார். இதற்கு காரணம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார். அந்த போட்டியில் அவர் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனால் இலங்கை அணி 50 ரன்களில் சுருண்டது. சிராஜின் ஸ்பெஷாலிட்டியே வாபல்(wobble) ஸ்விங் என்ற பந்து வகை தான். இதனை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது மற்ற அணி வீரர்கள் எல்லாம் யோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்கப்படும் நிலையில் பாட் காமின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முகமது சிராஜ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதாவது முகமது சிராஜ் சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் ஏதேனும் யுக்திகளை கடைப்பிடித்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மற்ற நாட்டு வீரர்கள் பதில் அளித்திருந்தால், நிச்சயமாக சிராஜை பாராட்டி, ஆம் அவருடைய பந்துவீச்சை நாங்கள் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று ஏதேனும் கூறி இருப்பார்கள்.

ஆனால் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், சிராஜ் எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என்பது போல் ஒத்த வார்த்தையில் நோ என்று பதில் அளித்துவிட்டு அதன் பிறகு எதுவுமே சிராஜ் தொடர்பாக பேசாமல் சென்று விட்டார்.இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் ஆஸ்திரேலியாவுக்கு இவ்வளவு திமிர் ஆகாது என்று ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Story first published: Thursday, September 21, 2023, 18:14 [IST]
Other articles published on Sep 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+