Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களுக்கு திறமை கிடையாது.. யாரையும் சேர்க்க மாட்டேன்.. பஞ்சாயத்தை தொடங்கிய பேட் கம்மின்ஸ்!

பெர்த்: ஆஸ்திரேலியா அணியில் ஒரேயொரு இந்திய வீரரை சேர்க்க வேண்டும் என்றால், எந்த வீரரை சேர்ப்பீர்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான விளம்பரப் பணிகளில் ஒளிபரப்பாளர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த கால வரலாற்றை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தும் முன்னாள் வீரர்கள் பலரும் பல்வேறு விஷயங்களை பேசியும், விவாதித்தும் வருகின்றனர். இன்னொரு பக்கம் பயிற்சி போட்டிகள், திட்டமிடல் உள்ளிட்டவற்றில் இரு அணிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

ind vs aus virat kohli pat cummins

இந்த நிலையில் இரு அணி வீரர்களுக்கு இடையில் வார்த்தை மோதல்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா பத்திரிகைகள் விராட் கோலியை ஹீரோ போல் கொண்டாடி வருவதை அந்நாட்டு வீரர்கள் ரசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் மார்ஷ் வெளிப்படையாக கிண்டல் செய்தார்.

தற்போது ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ், சில மறைமுகமாக வார்த்தை மோதல்களை தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ், நேதன் லயன், டிராவிஸ் ஹெட், போலாண்ட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரிடம், ஒரேயொரு இந்திய வீரரை ஆஸ்திரேலியா அணியில் சேர்க்க வேண்டும் என்றால், எந்த வீரரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிராவிஸ் ஹெட், ரோஹித் சர்மாவை தான் தேர்வு செய்வேன். அவரின் பேட்டிங் ஸ்டைல் கூடுதல் அதிரடியாக இருக்கிறது. வழக்கமாகவே எனக்கு அதிரடியாக விளையாடுவோரை பிடிக்கும். அதேபோல் இந்த கேள்விக்கு விராட் கோலியின் பெயர் பதிலாக வரும் நினைப்பீர்கள். ஆனால் நான் ரோஹித் சர்மாவை தேர்வு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் போலாண்ட் பேசுகையில், நிச்சயமாக ஜஸ்பிரிட் பும்ராவை தான் தேர்வு செய்வேன்.

ஏனென்றால் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலர்களில் பும்ராவும் ஒருவர் என்று கூறியுள்ளார். பின்னர் மிட்சல் மார்ஷ் பேசுகையில், ரிஷப் பண்ட் தான். நம்பர் 5ல் விளையாடுவதோடு இளம் வீரராக இருக்கிறார். டெல்லி அணிக்காக விளையாடிய போது அவர் தான் என் கேப்டன் என்று கூறியுள்ளார்.

பின்னர் நேதன் லயன் பேசுகையில், நான் நிச்சயம் விராட் கோலியை தேர்வு செய்வேன். ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் இருந்தால், மிகவும் வலுவான பேட்டிங் வரிசையாக இருக்கும் என்று கூறியுள்ளார். இறுதியாக பேட் கம்மின்ஸ் பேசுகையில், யாரையும் தேர்வு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். பேட் கம்மின்ஸ்-ன் இந்த பதில் இந்திய வீரர்களையும், ரசிகர்களையும் சீண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Wednesday, November 20, 2024, 12:06 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+