Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு திரும்புகிறார் கம்பீர்! ரோகித் சர்மா குறித்து முக்கிய முடிவு.. அடிலெய்டில் மாற்றம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் ஆஸ்திரேலியா தொடரில் தன்னுடைய பணியை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பத்து நாட்கள் இருந்த நிலையில் திடீரென்று கம்பீர் இந்தியா திரும்பி சென்றார். தனிப்பட்ட காரணத்திற்காக கம்பீர் இந்தியா வந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் கென்பேராவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கம்பீர் களமிறங்கவில்லை.

ind vs aus gautam gambhir pink ball test

கம்பீர் இல்லாத தருணத்தில் அபிஷேக் நாயர், ரியான் டென் டோட்சேட் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியை மேற்பார்வை செய்தனர். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஆறாம் தேதி தொடங்க உள்ள நிலையில், கம்பீர் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.

கம்பீர் வந்த உடனே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முடிவு செய்வார் என தெரிகிறது. ஏனென்றால் காயத்திலிருந்து திரும்பி இருக்கும் கில் பயிற்சி ஆட்டத்தில் அரை சதம் அடித்தார். அது மட்டும் இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ரோகித் சர்மாவும் தற்போது அணிக்கு திரும்பிருக்கிறார்.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரண்டு வீரர்கள் பதில் யார் வெளியே செல்வார்கள். கேஎல் ராகுல் மீண்டும் நடுவரிசைக்கே செல்வரா? ரோகித் சர்மா தற்போது எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறார் என்பது குறித்து எல்லாம் கம்பீர்தான் முடிவு எடுக்கப் போகிறார். கேஎல் ராகுல் தமக்கு கிடைத்த வாய்ப்பு சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு முதல் வீரராக அபாரமாக விளையாடினார்.

இதனால் கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா நடுவரிசையில் விளையாடினார். இதனால் இரண்டாவது டெஸ்டிலும் அவர் நடுவரிசைக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பல்வேறு முடிவுகளை எடுக்கப் போவதால் இரண்டாவது டெஸ்டில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, December 2, 2024, 21:40 [IST]
Other articles published on Dec 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+