Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- Pink Ball டெஸ்ட் போட்டியில் இது மட்டும் நடந்ததே கிடையாது! அதிக வெற்றி பெற்றது யார்?

அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த தொடர் பகல் இரவு ஆட்டமாக பிங் நிற பந்தை பயன்படுத்தி நடைபெறுகிறது. ஒரு காலகட்டத்தில் மின்விளக்குகள் கூட பயன்படுத்தாமல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டது.

தற்போது பகல் இரவு ஆட்டமாக இரவு நேரத்தில் பேட்ஸ்மேன் கண்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் பந்து பயன்படுத்தப்படுகிறது.இதுவரை சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 22 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இந்த 22 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே ஐந்து நாட்கள் நடைபெற்று இருக்கிறது.

ind vs aus pink ball test border gavaskar trophy

எஞ்சிய 21 போட்டிகளும் ஐந்து நாட்களுக்கு முன்பே முடிந்து இருக்கிறது.அது மட்டுமல்லாமல் இந்த 22 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு டெஸ்ட் இரண்டு நாட்களுக்குள்ளே முடிந்திருக்கிறது. இந்த 22 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு போட்டி கூட சமனில் இதுவரை முடிந்தது கிடையாது. இந்த நிலையில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலிய அணியே அதிக வெற்றியை பெற்று இருக்கிறது.

இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி 11 வெற்றி ஒரு தோல்வி தழுவி இருக்கிறது. இங்கிலாந்து அணி ஏழு டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் இரண்டு வெற்றி, ஐந்து தோல்வியை பெற்றிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 5 பகல் இரவு டெஸ்டில் விளையாடி ஒரு வெற்றி நான்கு தோல்வியை தழுவி இருக்கிறது.இந்திய அணி இதுவரை நான்கு பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறது.

இதில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியை இந்தியா அடைந்திருக்கிறது. பாகிஸ்தான் அணி 4 பிங்க் பால் டெஸ்டில் விளையாடி ஒரு வெற்றி மூன்று தோல்வியை தழுவி இருக்கிறது. இலங்கை அணியை பொறுத்தவரை நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வி நியூசிலாந்து பொருத்தவரை ஒரு வெற்றி மூன்று தோல்வியை தழுவி இருக்கிறது.

தென்னாபிரிக்க அணி இரண்டு பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியை தழுவி இருக்கிறது. வங்கதேசமும் ஜிம்பாபேவும் விளையாடிய ஒரு பிங்க் பால் டெஸ்ட் போட்டியிலும் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறது.

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபசென் 14 இன்னிங்ஸில் 894 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் நான்கு சதம் மூன்று அரை சதம் அடங்கும். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 11 பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 760 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் ஐந்து அரை சதம் அடங்கும்.

Story first published: Monday, December 2, 2024, 20:32 [IST]
Other articles published on Dec 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+