For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS- Pink Ball டெஸ்ட் ஒரே தலை வலி தான் போங்க! கொஞ்சம் கூட யூகிக்க முடியாது- ஸ்மித் கருத்து

அடிலெய்ட் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இளஞ்சிவப்பு நிறம் பந்து பயன்படுத்தப்படுகிறது.இளஞ்சிவப்பு நிற பந்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணி விளையாடிய 12 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இதே மைதானத்தில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால் கடந்த முறை ஏற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி இருக்கிறது.

ind vs aus pink ball test border gavaskar trophy

இந்த நிலையில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இருக்கும் சவால்கள் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பிங்க் நிற பந்து எப்போதும் வீரர்களுக்கு கடும் சவால்கள் அளிக்கும். எந்த நேரமாக இருந்தாலும் சரி எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி முழு கவனத்துடன் இருந்தால் மட்டுமே ரன் சேர்க்க முடியும்.

சில சமயங்களில் நாம் யூகிக்கவே முடியாது. எனவே முழு கவனத்துடன் பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டின்அடிப்படையில் தான் பிங்க் பால் டெஸ்ட் போட்டியும் இருக்கும். சில சமயம் போட்டி வேகமாக நகரும், சில சமயம் விக்கெட்டுகள் விழும். பந்து புதுமையாக இருக்கும் போதும், பழையதாக மாறும் போதும்,போட்டியின் சூழலும் மாறும்.

இதைத்தவிர அதுவும் ஒரு டெஸ்ட் போட்டி தான் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மினச் அடிலெய்டு மைதானத்தில் பிங்க் நிற பந்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். ரன் சேர்க்க நாம் சில வித்தியாசமான முறையை கையாள வேண்டும். ஆனால் எனக்கு அடிலெய்ட் மைதானம் பொருந்தும் என நினைக்கிறேன்.

அங்கு நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கின்றேன். கடைசி இரண்டு ஆண்டுகளாக நான் அடிலெய்டில் நல்ல ரன்களை குவித்து இருக்கிறேன். அதையே இம்முறையும் நான் செய்வேன். பகல் இரவு ஆட்டம் என்பதால் நிறைய நண்பர்கள் உறவினர்கள் இந்த போட்டியை பார்க்க முடியும். எனவே இந்த போட்டியை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 2, 2024, 21:29 [IST]
Other articles published on Dec 2, 2024
English summary
Ind vs Aus Pink Ball Test - Smith and Cummins speaks about challenges in day night test IND vs AUS- Pink Ball டெஸ்ட் ஒரே தலை வலி தான் போங்க! கொஞ்சம் கூட யூகிக்க முடியாது- ஸ்மித் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+