Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: அஸ்வின், சர்ஃபராஸ், ஜடேஜா அதிரடி நீக்கம்.. 3 இளம் வீரர்களை களமிறக்கிய கேப்டன் பும்ரா

பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பெர்த் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மூத்த ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக ஒரே ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அணியில் இடம் பெற்று இருக்கிறார். அதே போல மிடில் ஆர்டரில் இடம் பெற்று வந்த சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

ind vs aus india australia

ஒரு ஸ்பின்னர் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய அணி கேப்டன் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன், ஒரு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளராக நிதிஷ் குமார் ரெட்டியை களமிறக்கி உள்ளது. அவருக்கு இதுவே அறிமுகப் போட்டி ஆகும். ஹர்ஷித் ராணாவுக்கும் இதுவே அறிமுகப் போட்டி ஆகும்.

இந்தியா (பிளேயிங் லெவன்): கே எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்

பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அஸ்வின் மற்றும் ஜடேஜா நீக்கப்பட அதுவே முக்கிய காரணம். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் கை கொடுப்பார் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியில் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் துவக்க வீரராக உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து பேட்டிங் செய்ய உள்ளார். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய மூன்று அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி உள்ளது. ஸ்பின்னராக நாதன் லியோன் செயல்பட உள்ளார்.

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்

Story first published: Friday, November 22, 2024, 7:42 [IST]
Other articles published on Nov 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+