Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், அஸ்வின், சர்ஃபராஸ் கான் அவுட்.. அணியை விட்டு நீக்க முடிவு.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 22 அன்று துவங்க உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் முக்கியமான வீரர் ரோஹித் சர்மா.

அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற மாட்டார். அடுத்து மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ind vs aus india australia

அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை காட்டிலும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜடேஜா மற்றும் சுந்தரை பிளேயிங் லெவனில் ஆட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதும் அஸ்வின் தனது இடத்தை இழக்க முக்கிய காரணம் ஆகும். அடுத்து நியூசிலாந்து தொடரில் 150 ரன்கள் அடித்த சர்ஃபராஸ் கானை அணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்கள் அடித்தாலும், அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் சேர்க்கவில்லை. அவர் அவசரப்பட்டு தனது விக்கெட்டை தானே தாரை வார்த்து வருகிறார். நிதானமாக ஆட வேண்டிய இடத்திலும், விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவிலும், அதிரடியாக ஆட முயன்று தனது விக்கெட்டை இழந்து வருகிறார்.

இது போன்ற அணுகுமுறையை ஆஸ்திரேலியாவில் செய்ய முடியாது என்பதோடு ,அனுபவ வீரர் கே எல் ராகுலை அணியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் சர்ஃபராஸ் கான் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக கே எல் ராகுலும், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இடம் பெற உள்ளனர். அஸ்வின் இடத்தில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடம் பெறுவார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உத்தேச பிளேயிங் லெவன் விவரம்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ஆகாஷ் தீப்

Story first published: Monday, November 4, 2024, 13:56 [IST]
Other articles published on Nov 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+