
புகார்
சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளாக இடம் பெற்று வருகிறார். அதிலும் அவர் வெளிநாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்ற புகார் இருந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கூட அவருக்கு முக்கியத்துவம் இருக்காது என கூறப்பட்டு வந்தது.

முக்கிய விக்கெட்
இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பல்வேறு வகையாக அவர் பந்து வீசி விக்கெட் வேட்டை நடத்தினார். ஆபத்தான ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தினார்.

அந்த அவசியம் இல்லை
இது பற்றி பேசிய ஓஜா, அஸ்வின் இன்னும் அறிமுக வீரர் அல்ல. அவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என தெளிவாக தெரியும். இனியும் அவர் தன் இடத்துக்காக ஆட வேண்டிய அவசியம் இல்லை. அது தான் ஒரு வீரருக்கு மிகவும் அவசியம் என்றார்.

பயம் இல்லை
மேலும், அணியில் இருந்து நீக்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை என்றால் உடல் மொழி மாறி விடும். அந்த வசதியானது சில விஷயங்களை செய்து பார்க்க வழி வகுக்கும். அதுதான் அஸ்வின் விஷயத்தில் நடக்கிறது என்றார் ஓஜா.

பந்துவீச்சு கேப்டன்
களத்தில் அஸ்வின் தான் பந்துவீச்சு கேப்டன். அந்த அவருடைய செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவர் தன் பந்துவீச்சு மற்றும் திட்டத்தை எப்போதும் சரியாக வைத்துக் கொள்கிறார் என அஸ்வினை பாராட்டி பேசினார் ஓஜா.


Click it and Unblock the Notifications











