For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டக் அவுட் ஆனது கூட பரவாயில்லை..இதை ஒத்துக்கவே முடியாது..இளம் வீரர் சொதப்பல்.பொங்கி எழுந்த ரசிகர்கள்!

அடிலெய்டு : இந்திய அணியில் தன் மோசமான பார்முக்கு இடையேயும் வாய்ப்பு பெற்று வருகிறார் ப்ரித்வி ஷா.

அவர் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனார். அப்போதே அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நூற்றாண்டில் இப்படி நடந்ததே இல்லை.. தவித்த ஆஸி. அணி.. தெறிக்கவிட்ட இந்தியா.. தரமான சம்பவம்!இந்த நூற்றாண்டில் இப்படி நடந்ததே இல்லை.. தவித்த ஆஸி. அணி.. தெறிக்கவிட்ட இந்தியா.. தரமான சம்பவம்!

அதன்பின் அவர் பீல்டிங்கிலும் சொதப்பினார். முக்கிய விக்கெட்டை அவர் கோட்டை விட்டார். இதை அடுத்து ரசிகர்கள் அவர் மீது பொங்கி எழுந்தனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

ப்ரித்வி ஷா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற போதே அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அவர் ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு இருந்தார். கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில்லை டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பயிற்சிப் போட்டிகளிலும் ப்ரித்வி ஷா சொதப்பினார். இந்த நிலையில் கேப்டன் கோலி அவரை அணியில் சேர்க்க மாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளித்து அதிர்ச்சி அளித்தார் கோலி.

டக் அவுட்

டக் அவுட்

முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா போட்டியின் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டனர். அவரை அணியில் தேர்வு செய்த கோலி, ரவி சாஸ்திரியையும் சேர்த்தே விமர்சனம் செய்தனர்.

கேட்ச்சை தவறவிட்டார்

கேட்ச்சை தவறவிட்டார்

இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போதும் மோசமாக செயல்பட்டார். மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்த போது அவர் கொடுத்த எளிதான கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டார் ப்ரித்வி ஷா. அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

வேறு வீரரை ஆட வையுங்கள்

வேறு வீரரை ஆட வையுங்கள்

சில ரசிகர்கள் ப்ரித்வி ஷாவுக்கு தலையில் அடிபட்டது எனக் கூறி அவருக்கு பதில் இந்த டெஸ்டில் வேறு வீரரை ஆட வையுங்கள் என கூறும் அளவுக்கு சென்றுள்ளது இந்த விவகாரம். லாபுஷாக்னே கொடுத்த பல கேட்ச்களை இந்திய அணி கோட்டை விட்டது.

தப்பினர்

தப்பினர்

லாபுஷாக்னே 47 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடி 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், கேட்ச் வாய்ப்புக்களை நழுவ விட்ட வீரர்கள் தப்பினர்.

Story first published: Friday, December 18, 2020, 17:12 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
IND vs AUS : Prithvi Shaw dropped catch of Marnus Labushagne
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X