Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமில் இடம் பிடிக்க என்ன வேணா செய்வீங்களா? ரோஹித் சர்மாவை அடித்த ப்ரித்வி ஷா!

பிரிஸ்பேன் : இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பை இழந்த ப்ரித்வி ஷா, நான்காவது டெஸ்ட் போட்டியில் மாற்று வீரராக காயம் ஏற்பட்ட நவ்தீப் சைனிக்கு பதில் பீல்டிங் செய்தார்.

அப்போது அவர் ரோஹித் சர்மாவை பந்தால் தாக்கினார். அது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் சிலர் அணியில் இடம் பிடிக்க ப்ரித்வி ஷா திட்டமிட்டு செயல்படுகிறார் என கிண்டல் செய்தனர்.

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா 2020 ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டார். எனினும், அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றார். மோசமான பார்மில் இருந்த அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளித்தது இந்திய அணி நிர்வாகம்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

அந்தப் போட்டியில் ப்ரித்வி ஷா 0, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த மோசமான செயல்பாட்டை அடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பின் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா அணியின் துவக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.

என்ன செய்தார்?

என்ன செய்தார்?

இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நவ்தீப் சைனி காயமடைந்தார். அவருக்கு பதில், ப்ரித்வி ஷா பீல்டிங் செய்தார். அப்போது வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் லாபுஷாக்னே ஓரி ரன் ஓட முயன்றார்.

கிண்டல்

கிண்டல்

ப்ரித்வி ஷா பந்தை எடுத்து அவரை ரன் அவுட் செய்யும் முயற்சியில் ரோஹித் சர்மாவை பலமாக பந்தால் தாக்கினார். பலரும் ப்ரித்வி ஷா பீல்டிங்கில் கூட தவறாக பந்தை எறிந்ததை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளனர். சிலர் ரோஹித் சர்மாவை காயமடைய வைத்தால் மாற்று வீரராக அணியில் இடம் பெறலாம் என அவர் இப்படி செய்துள்ளார் என கிண்டல் செய்துள்ளனர்.

Story first published: Friday, January 15, 2021, 17:43 [IST]
Other articles published on Jan 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+