மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ரோகித் சர்மா, கில் ஆகியோர் இடம்பெறாத நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர், படிக்கல் ஆகியோர் நீக்கப்பட்டு அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நட்சத்திர வீரர் புஜாரா அறிவுரை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்தை தான் செய்யும் என்று நான் நினைக்கின்றேன். இந்திய அணியின் பேட்டிங் சரியாக இல்லாததால் அஸ்வின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் வர வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹர்சித் ரானா சரியாக விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதில் வேறு யாராவது மாற்றப்படுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது. என்னைக் கேட்டால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் இளம்வீரராக இருப்பதால் மேலும் கொஞ்சம் ஆதரவு தேவைப்படுகிறது.
முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டி அவருக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. எனவே அணி நிர்வாகம் ஹர்ஷித் ராணாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். ஹர்ஷித் ராணா,நல்ல பவுலராக இருக்கிறார். ஒரு மேட்ச் சரியாக விளையாடதால் அவரை நீக்குவது தவறு என்று நினைக்கின்றேன்.
எனினும் அணி நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று புஜாரா கூறி இருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பியூஸ் சாவ்லா, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அஸ்வின் 18 ஓவர்கள் வீசி ஒரு முனையில் ரன்களை நல்ல முறையில் கட்டுப்படுத்தினார். வாஷிங்டன் சுந்தர் அடிக்கும் அதே ரன்களை அஸ்வினும் தனது பேட்டிங் மூலம் அளிப்பார். இதனால் அஸ்வினை மாற்றக்கூடாது என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.