Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வில் ரன் அடிக்காம போனதுக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்த சீனியர் வீரர்!

மும்பை : இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா கடந்த 2018 - 19 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக வலம் வந்தார்.

ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை.

அதற்கு என்ன காரணம் என ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார் புஜாரா.

லாக்டவுன்

லாக்டவுன்

கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்தியாவில் பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஐபிஎல் தொடரிலும் பங்கேற்காத புஜாரா இதனால் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடாமல் ஆஸ்திரேலியா சென்றார்.

பயிற்சி

பயிற்சி

அங்கே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன் அவர் ஒரே ஒரு பயிற்சிப் போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்தார். இந்த நிலையில், தன்னால் டெஸ்ட் தொடருக்கு தன்னால் முழுமையாக தயார் ஆக முடியவில்லை என கூறி இருக்கிறார்.

கடினமாக இருந்தது

கடினமாக இருந்தது

கொரோனா வைரஸ் காரணமாக நிறைய முதல் தர கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. நான் ஒரே ஒரு பயிற்சிப் போட்டியில் மட்டுமே ஆடினேன். முதலில் எனக்கு கடினமாக இருந்தது. ஆனால், இரண்டு போட்டிகளில் ஆடிய பின் ஆஸ்திரேலியாவில் எப்படி சரியாக ஆட வேண்டும் என தெரிந்து கொண்டேன் என்றார் புஜாரா.

ஆஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலியா திட்டம்

ஆஸ்திரேலிய அணியையும் பாராட்ட வேண்டும். கடந்த டெஸ்ட் தொடரில் நான் ஆடியதை வைத்து அவர்கள் நிறைய திட்டமிட்டு இருந்தார்கள். அவர்கள் திட்டத்தை உடைப்பது எளிதாக இல்லை. ஆனால், இரண்டு போட்டிகளில் ஆடிய பின் எனக்கு கவனத்தை பெற்றேன். கடைசி இரண்டு போட்டிகளில் ரன்களும் அடித்தேன் என்றார் புஜாரா.

Story first published: Friday, January 29, 2021, 17:20 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+