Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AUS vs IND-ஆஸ்திரேலிய டெஸ்டில் வெறும் 6 விக்கெட் தான் தேவை!யாரும் தொட முடியாத சாதனையை நோக்கி அஸ்வின்

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அஸ்வின் ஒரு மகத்தான சாதனை படைக்க போகிறார். பொதுவாக வெளிநாட்டு மண்ணில் இந்தியா விளையாடுகிறது என்றால் அஸ்வின் பெருமளவில் இந்திய அணியில் சேர்க்கப்பட மாட்டார்.

ஆனால் அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தால் அஸ்வின் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு மண்ணில் மூன்று டெஸ்டுகளில் விளையாடி அஸ்வின் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

bgt 2024 ind vs aus r ashwin virat kohli


இந்த சூழலில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், அஸ்வினை சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வினை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒரு மிகப்பெரிய சாதனையை தொடுவார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு சேரும். தற்போது அஸ்வின் 194 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அஸ்வினுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் நார்தன் லயன் இருக்கிறார்.அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

அஸ்வினை முந்தி அவர் 200 விக்கெட்டுகளை தொட வேண்டும் என்றால் 13 விக்கெட்டுகளை லயான் அஸ்வினுக்கு முன்பு வீழ்த்த வேண்டும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இருக்கின்றார். நான்காவது இடத்தில் 147 விக்கெட்களுடன் மிட்செல் ஸ்டார்க்கும், ஐந்தாவது இடத்தில் 134 விக்கெட்டு களுடன் இங்கிலாந்து வீரர் பிராடும் உள்ளனர். இதனால் அஸ்வின் இந்த மிகப்பெரிய சாதனையை தொடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, November 20, 2024, 19:57 [IST]
Other articles published on Nov 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+