"பிரில்லியண்ட் கேப்டன்சி".. கோலி கூட இப்படி செய்தது இல்லை.. புரட்டி எடுத்த ரஹானே.. என்ன நடந்தது?
சிட்னி; ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானேவின் திட்டங்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுபாக நடந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் இறங்கிய நிலையில் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எப்படி
இந்த போட்டியில் கோலி விடுப்பு எடுத்துள்ளதால் ரஹானே கேப்டனாக களமிறங்குகிறார். இதில் கோலி இல்லாமல் இந்திய அணி என்ன செய்யும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் ரஹானே மிகவும் சிறப்பாக கேப்டன்சி செய்தார். முதல் 10 ஓவர்களில் சிறப்பான பீல்டிங் செட் செய்தார்.

பும்ரா
முக்கியமாக பும்ராவிற்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார். பவுலர்களுக்கான கேப்டன் ரஹானே என்ற பெயர் உண்டு. இன்று அதற்கு ஏற்றபடி பவுலர்களுக்கு ஏற்றபடி சிறப்பான திட்டங்களை வகுத்தார். இதில் அதிகம் கவனிக்க வேண்டிய விஷயம்.. பந்து நன்றாக பவுன்ஸ் ஆனது. இதனால் முதல் 20 ஓவர்களை ஸ்பீட் பவுலர்கள்தான் வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்பின்
கோலி இருந்திருந்தால் முதல் 20 ஓவர்களை ஸ்பின் பவுலர்களுக்கு கொடுத்து இருக்க மாட்டார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 11வது ஓவரையே அஸ்வினுக்கு ரஹானே கொடுத்தார். அதன்பின் ஜடேஜாவையும் ஸ்பின் செய்ய அழைத்தார். ரஹானேவின் இந்த மூவ் பெரிய அளவில் வைரலானது.

எப்படி
ரஹானே இப்படி ஸ்பின் பவுலர்களை போட வைப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அஸ்வினுக்கு ரஹானே ஓவர் கொடுத்தார். அஸ்வின் ஓவரில் தொடக்கத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினார்கள். விளைவு அஸ்வின் ஓவரில் அடுத்தடுட்து மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித் இரண்டு பேருமே அவுட் ஆனார்கள்.

ஆலோசனை
இன்று அஸ்வினுக்கு ஏற்றபடி சிறப்பான பீல்டிங்கை ரஹானே செட் செய்து இருந்தார். கோலி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வினுக்கு இவ்வளவு சீக்கிரம் ஓவர் கொடுத்து இருக்க மாட்டார். ரஹானேவின் இந்த சிறப்பான கேப்டன்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல் பாதி முழுக்க ரஹானேவின் கேப்டன்சி பெரிய அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications