Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உங்களுக்கு என்னங்க பிரச்சினை?” தேவையின்றி வம்பிழுத்த மைக்கேல் வாகன்.. திருப்பிக்கொடுத்த ரவிசாஸ்திரி

நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களும், மைக்கேல் வாகனும் கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

அந்த அணியில் மார்னஸ் லபுனேஸ் (49), ஸ்டீவ் ஸ்மித் (37) ஆகியோரை தவிர மற்றவர்கள் அனைவருமே மிக மோசமாக சொதப்பினர். குறிப்பாக டேவிட் வார்னர், கவாஜா போன்றோரே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

ஜடேஜாவின் வீடியோ

ஜடேஜாவின் வீடியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். எனினும் அவர் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பால் டேம்பரிங் செய்தாரா? என்ற புயலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கிளப்பி விட்டுள்ளன. ரசிகர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

மைக்கேல் வாகன் பதிவு

மைக்கேல் வாகன் பதிவு

இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஜடேஜா தனது கையில் என்ன தடவிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் இதுபோன்ற ஒன்றை நான் பார்த்ததே இல்லை எனக்கூறியிருந்தார். இதே போல டிம் பெயினும், சுவாரஸ்யமான ஒன்று எனக்குறிப்பிட்டிருந்தார்.

ரவிசாஸ்திரி பதிலடி

ரவிசாஸ்திரி பதிலடி

இந்நிலையில் ரவிசாஸ்திரி தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதில், எனக்கு இரண்டு முக்கிய கேள்விகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணியில் எதேனும் பிரச்சினை இருக்கிறதா??.. இல்லை. போட்டியின் நடுவர் இந்த விவகாரத்தில் எதேனும் தலையிட்டு நடவடிக்கை எடுத்தாரா? அதுவும் இல்லை. பின்னர் எதற்காக இதுகுறித்து விவாதம் நடத்தி வருகின்றனர். அது வெறும் ஆயின்மண்ட் தான்.

தேவை இல்லை

தேவை இல்லை

ஜடேஜாவுக்கு விரல்களில் உள்ள வலிகளை போக்கும் ஒரு நிவாரணம் தான் அது. போட்டியின் நடுவருமே இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ள சூழலில் இவர்கள் ஏன் சர்ச்சையாக்குகின்றனர். நாக்பூர் களத்தில் பந்து ஸ்பின் ஆவதற்கு எதையுமே செய்ய தேவையில்லை. ஏனென்றால் இயற்கையாகவே இங்கு பந்து நன்கு டேர்ன் ஆகும் என ரவிசாஸ்தி கூறியுள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரம் குறித்து விசாரணையும் நடந்து முடிந்துள்ளது. முதல் நாள் ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் ரோகித் சர்மாவையும், ஜடேஜாவையும் நடுவர் அழைத்துள்ளார். அப்போது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டு தான் ஜடேஜா நடந்துக்கொண்டார் எனக்கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

Story first published: Friday, February 10, 2023, 16:09 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+