Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லக் கூடாத ரகசியம்.. போதையில் உளறிய ரவி சாஸ்திரி.. போட்டுக் கொடுத்த ஆஸி. வீரர்.. வெடித்த சர்ச்சை!

சிட்னி : இந்திய அணியில் ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பலிடம் குடி போதையில் உளறி இருக்கிறார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்த தகவலை இயான் சாப்பலே வெளிப்படையாக ஊடகங்களிடம் கூறி இருப்பதால் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.

இயான் சாப்பல் இது பற்றி மேலோட்டமாகவே கூறினார். ஆனால், ரவி சாஸ்திரி எந்த அளவுக்கு இந்திய அணி திட்டங்களை அவரிடம் உளறினார் என்பது தெரியவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 முதல் நடைபெற உள்ளது. இந்த தொடர் முக்கியமான தொடராகும். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி இருந்தது. அதற்கு பழி தீர்க்க ஆஸ்திரேலியா காத்துக் கொண்டுள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இந்த தொடரில் இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் சில டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் முதல் டெஸ்டில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது. இந்திய அணியின் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் முதல் சில டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலையில் உள்ளனர்.

குழப்பம்

குழப்பம்

கேப்டன் விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட மாட்டார். இந்த நிலையில், இரு அணிகளும் எந்த வீரரைத் தேர்வு செய்யலாம் என குழப்பத்தில் உள்ளன. இந்திய அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இல்லாததால் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக யாரை ஆட வைக்கலாம் என்ற விவாதம் நடந்து வருகிறது.

ரவி சாஸ்திரி செய்த காரியம்

ரவி சாஸ்திரி செய்த காரியம்

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன்னுடன் மது அருந்தியதாகவும் அப்போது இந்திய அணியின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் யார் என்பது பற்றி அவர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

இயான் சாப்பல் தகவல்

இயான் சாப்பல் தகவல்

மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ்வுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என ரவி சாஸ்திரி, இயான் சாப்பலிடம் கூறி இந்தியா இருக்கிறார். இந்த தகவலை இயான் சாப்பல் ஆஸ்திரேலிய அணியிடம் தெரிவித்து இருப்பார். ஆனால், அதையும் விட தற்போது ஊடகங்களிடமே வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

மூன்று பந்துவீச்சாளர்கள்

மூன்று பந்துவீச்சாளர்கள்

மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் இடத்துக்கு உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் சைனி இடையே போட்டி நிலவுகிறது. இதில் உமேஷ் யாதவ் தான் அனுபவ வீரர். கடந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. திட்டமிடும்

ஆஸி. திட்டமிடும்

ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பலவீனங்களை குறி வைக்கும். பந்துவீச்சில் இந்திய அணி பலமாக இருப்பதால் அதை உடைக்க ஆஸ்திரேலிய அணி முயலும். தற்போது உமேஷ் யாதவ் தான் வேகப் பந்துவீச்சாளராக இடம் பெறுவார் என்பது தெரிந்த நிலையில் அவருக்காக தனியாக அந்த அணி திட்டங்களை தயார் செய்யும். அது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

சர்ச்சை

சர்ச்சை

ஒரு தேசிய அணியியன் பயிற்சியாளராக இருந்து கொண்டு குடி போதையில் அணி ரகசியங்களை ரவி சாஸ்திரி உளறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சில ரசிகர்கள் இதை வைத்து அவரை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

Story first published: Thursday, December 10, 2020, 18:22 [IST]
Other articles published on Dec 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+