Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரத்திலேயே எந்த வீரருக்கும் இப்படி நடந்ததில்லை.. பாகிஸ்தானால் அஸ்வினுக்கு நடந்த விஷயம்

மெல்போர்ன்: 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத விசித்திரமான சாதனை ஒன்றை ரவிச்சந்திரன் அஸ்வின் செய்து இருக்கிறார். அதுவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வைத்து இந்த சாதனையை அவர் செய்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனையாளராக இருக்கும் அஸ்வின் சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அனில் கும்ப்ளே-வுக்கு அடுத்து இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அஸ்வின் செய்து இருந்தார். சர்வதேச அளவில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தார். 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தார் அஸ்வின்.

ind vs aus ravichandran ashwin india vs australia test match vs

இதன் மூலம் 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமாக விளையாடிய வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றார். இதுவரை 78 வீரர்கள் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் எந்த வீரரும் செய்யாத ஒரு அரிய சாதனையை அஸ்வின் செய்து இருக்கிறார்.

அதாவது 100 போட்டிகள் அல்லது அதற்கும் மேல் விளையாடிய வீரர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வை அறிவித்த முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் செய்து இருக்கிறார். இதுவரை 100 அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 78 வீரர்களில் ஐந்து பாகிஸ்தான் வீரர்களை தவிர்த்து விட்டால் மொத்தம் 73 வீரர்கள் உள்ளனர்.

அவர்களில் 70 வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாடி உள்ளனர். ஆனால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத மூன்று வீரர்கள் உள்ளனர். அவர்கள் - அஸ்வின், புஜாரா மற்றும் விராட் கோலி.

இவர்களில் புஜாரா மற்றும் விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை. இந்த நிலையில். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வை அறிவித்த முதல் வீரர் என்ற விசித்திரமான சாதனையை அஸ்வின் செய்து இருக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. அதன் காரணமாகவே இந்த விசித்திர சாதனையை அஸ்வின் செய்து இருக்கிறார்.

Story first published: Monday, December 23, 2024, 8:20 [IST]
Other articles published on Dec 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+