Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்த்ரி என்னை பயிற்சியாளராக இருந்த போது திட்டினார்.. உண்மையை உடைத்த அஸ்வின்

பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2024-25 இன் மூன்றாவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த விசயங்கள் குறித்து அஸ்வின் தற்போது பகிர்ந்து வருகிறார்.

அதில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நடந்த ஒரு சம்பவத்தை அஸ்வின் பகிர்ந்து கொண்டார். 2018 இல் இங்கிலாந்திற்கு இந்தியா மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, இயன் வார்டுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஸ்வின், தனது பந்து வீச்சு நுட்பங்களை வெளிப்படுத்தியதற்காக ரவி சாஸ்திரியிடம் திட்டி வாங்கியுள்ளார். எனினும் தமது பந்துவீச்சு ரகசியத்தை வெளியே சொன்னதால், தமக்கு பயம் ஏதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள அஸ்வின், ரவி சாஸ்த்ரி எதற்காக எனனை கண்டித்தார் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் கூறினார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் பாட்காஸ்ட்டில் நடைபெற்ற ஒரு உரையாடலின் போது, அஷ்வின் கிரிக்கெட்டைப் பற்றிய தனது அணுகுமுறையை விளக்கினார்: "எனக்குத் தெரியும், விளையாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உங்களிடம் உள்ளதை வழங்க முடியும் என்பது, மற்றொன்று உங்கள் முன் வைக்கப்படும் சவால்கரள எதிர்கொள்ள முடியும் என்பது." மேலும், "எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் தைரியமாக சொல்கிறேன்" என்றும் அவர் கூறினார். அஸ்வினுக்கும், ரவி சாஸ்த்ரிக்கும் இடையே பல முறை சச்சரவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை ஆஸ்திரேலிய தொடரின் போது, குல்தீப் யாதவ் தான் சிறந்த ஸ்பின்னர் என்று ரவி சாஸ்த்ரி கூறியது , தமது உத்வேகத்தை குலைக்கும் விதமாக இருந்ததாகவும், இதனை தாம் எதிர்பார்க்கவில்லை என்று அஸ்வின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி தந்த ரவி சாஸ்திரி, அனைவரும் விரும்பும் வகையில் ஒரு பயிற்சியாளரால் பேச முடியாது. சில சமயம், இப்படி பேசினால் தான், எதிர்பார்த்த செயல்பாடு வீரர்களிடமிருந்து கிடைக்கும் என்று ரவி சாஸ்த்ரி கூறினார்.

இந்தியாவுக்கு வெளியே 41 போட்டிகளில், 154 விக்கெட்டுகளை 30.05 என்ற சராசரியில் எடுத்தார். அவரது சாதனைகளில் எட்டு ஐந்து விக்கெட் மற்றும் இருமுறை ஒரு போட்டியில் பத்து விக்கெட்டுகளை எடுத்த இரண்டு சந்தர்ப்பங்கள் அடங்கும். கூடுதலாக, பேட்டிங்கில் 1,485 ரன்கள் எடுத்து இரண்டு சதங்களை அடித்தார். எனினும் பல வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் ஓய்வைத் தொடர்ந்து, தனுஷ் கோட்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இந்த ஆஃப்-ஸ்பின் ஆல்ரவுண்டர் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறும் தொடரின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக அணிக்கு இணைய உள்ளார்.

Story first published: Wednesday, December 25, 2024, 22:30 [IST]
Other articles published on Dec 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+