For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா நீக்கம்.. உள்ளே வந்த இளம் வீரர்.. பிசிசிஐ அதிரடி முடிவு.. பரபர மாற்றம்!

கான்பெர்ரா : இந்திய டி20 அணியில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டி20 போட்டியில் ஜடேஜா காயமடைந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

இதன் மூலம் முதல் டி௨௦ போட்டியில் ஜடேஜாவுக்கு மாற்றாக சாஹல் களமிறங்கிய சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.

முதல் டி20

முதல் டி20

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஜடேஜா சிறப்பாக ஆடி 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

ஜடேஜா காயம்

ஜடேஜா காயம்

அவர் பேட்டிங் ஆடிய போது முதலில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அடுத்த சில பந்துகளில் அவரது ஹெல்மட்டில் பந்து தாக்கியது. அப்போது அவர் மீதமிருந்த பந்துகளை நன்றாகவே சந்தித்தார். எந்த சிக்கலும் இருந்ததாக தெரியவில்லை.

மாற்று வீரர்

மாற்று வீரர்

எனினும், அவர் அடுத்து பந்துவீச வரவில்லை. அவருக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் அவர் சோர்வாக இருப்பதால், மூளை அழற்சி ஏற்பட்ட வீரர்களுக்கு மாற்று வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் பயன்படுத்தலாம் என்ற ஐசிசி விதிப்படி இந்திய அணி சாஹலை பந்துவீச்சின் போது பயன்படுத்தியது.

சர்ச்சை

சர்ச்சை

சாஹல் ஆல்-ரவுண்டர் இல்லை. ஆனால், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவுக்கு மாற்றாக அவரை ஆட வைத்ததும், ஜடேஜாவுக்கு ஹெல்மட்டில் பந்து தாக்கிய போது மருத்துவ பரிசோதனை செய்யாததும் சர்ச்சை ஆனது. ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ரெப்ரீயுடன் இது குறித்து விவாதம் செய்தனர்.

ஜடேஜா நீக்கம்

ஜடேஜா நீக்கம்

இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டிக்கு முன் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜடேஜா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறி உள்ளது. எனவே, அவரை டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து நீக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

உள்ளே வந்த இளம் வீரர்

உள்ளே வந்த இளம் வீரர்

ஜடேஜாவுக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரை டி20 தொடரிலும் இந்தியா சேர்த்துள்ளது.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய அணியில் முதல் டி20 போட்டியில் நடராஜன், முகமது ஷமி, தீபக் சாஹர் வேகப் பந்துவீச்சில் இடம் பெற்றனர். இரண்டாவது போட்டியில் ஷமி அல்லது சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தாக்குர் அணியில் இடம் பெறக் கூடும்.

Story first published: Saturday, December 5, 2020, 10:15 [IST]
Other articles published on Dec 5, 2020
English summary
IND vs AUS : Ravindra Jadeja dropped from T20 series, Shardhul Thakur added
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+