Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீமுக்கு இதை கூட பண்ணலைனா எப்படி? நெய்ல் வாக்னர் செய்த அதே விஷயம்.. களமிறங்க தயாராகும் ஜடேஜா!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா காயம் அடைந்தார்.

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய போது அவர் இடது கை பெருவிரலில் மோசமாக காயம் அடைந்தார்.

இதை அடுத்து அவர் இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சின் போது போட்டியில் பங்கேற்கவில்லை.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில், அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், இந்திய அணி தோல்வியை தவிர்க்க இரண்டாவது இன்னிங்க்ஸில் போராடி வருவது தான். ஜடேஜாவை பேட்டிங் ஆட வைக்க அதிரடி திட்டம் ஒன்றை வைத்துள்ளது இந்திய அணி.

நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து வீரர்

ஜடேஜாவும் அதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் நெய்ல் வாக்னர் முதல் இன்னிங்க்ஸில் காலில் காயம் அடைந்தார்.

காயத்துடன் ஆடிய வாக்னர்

காயத்துடன் ஆடிய வாக்னர்

ஆனால், அடுத்த மூன்று நாட்கள் அவர் போட்டியில் பங்கேற்றார். காலில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் அவர் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது., அவர் அப்போது வலி நிவாரணி மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு ஆடினார்.

என்ன செய்வார்?

என்ன செய்வார்?

ஜடேஜா பந்து வீச வரவில்லை என்றாலும், ஒருவேளை இந்திய அணி டிரா செய்யும் முயற்சியில் கடைசி ஓவர்கள் வரை களத்தில் இருந்தால் ஜடேஜாவின் பேட்டிங் அணிக்கு அவசியம் ஆகும். அப்போது அவர் ஊசி போட்டுக் கொண்டு வந்து ஆடுவார் என கூறப்படுகிறது.

Story first published: Sunday, January 10, 2021, 17:55 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+