Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜனை ஒதுக்கிய இந்திய அணி.. கடைசி நேர ட்விஸ்ட்.. முடிவை மாற்ற வைத்த ஆஸி!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ஆடும் இந்திய அணியில் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் இடம் பெறவில்லை.

Recommended Video

டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடமில்லை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

காயம் அடைந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகிய உமேஷ் யாதவ்வுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார் நடராஜன்.

அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டு அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

நவ்தீப் சைனி

நவ்தீப் சைனி

ஆனால், நடராஜனுக்கு பதில் மற்றொரு இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் இதுவே அறிமுகப் போட்டி ஆகும். நடராஜனுக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட என்ன காரணம்?

வாய்ப்பு

வாய்ப்பு

நவ்தீப் சைனி ஒருநாள் தொடரில் சுமாராகவே பந்து வீசி இருந்தார். அவருக்கு பதில் சேர்க்கப்பட்ட நடராஜன் சிறப்பாக பந்து வீசி, டி20 தொடரிலும் தன் முத்திரையை பதித்து இருந்தார். அப்படிப் பார்த்தால் டெஸ்ட் தொடரில் புதிய பந்துவீச்சாளர் தேவை என்ற நிலையில் சைனியை விட நடராஜனுக்கே வாய்ப்பு அதிகம்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆனால், நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பந்து வீசும் போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் தான் சிட்னி ஆடுகளத்தின் பிட்ச் குறித்து தெரிய வந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் அதிக பவுன்ஸ் பந்துகளை வீச ஏற்ற வகையில் பிட்ச்சை தயார் செய்து இருந்தது.

இது தான் காரணம்

இது தான் காரணம்

பந்தை பவுன்ஸ் செய்து வீசுவதில் நடராஜனை விட நவ்தீப் சைனி திறமை வாய்ந்தவர். அந்த அடிப்படையில் தான் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்திய அணியின் இந்த திட்டம் வெற்றி பெறுமா?

Story first published: Wednesday, January 6, 2021, 18:20 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+