Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாண்டிங் உங்களுக்கு முதலில் அருகதை இருக்கா? நீங்க எலலாம் கோலி பற்றி பேசவே கூடாது.. ரசிகர்கள் தாக்கு

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியா வீரர் கோன்ஸ்டாஸ் உடன் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், விராட் கோலியை கடுமையாக சாடி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடுவர், விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் ரிக்கி பாண்டிங் அட்வைஸ் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது இந்திய ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

ind vs aus virat kohli sam konstas boxing day test vs

களத்தில் எதிரணி வீரர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேச தகுதியே இல்லாத நபர் ரிக்கி பாண்டிங் என்று இந்திய ரசிகர்கள் கடுமையாக சாடி இருக்கிறார்கள். ரிக்கி பாண்டிங் இந்திய வீரர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பது அவருக்கு மறந்து விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாண்டிங் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்வதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், 19 வயதாக ஹர்பஜன் இருந்தபோது ரிக்கி பாண்டிங், ஆட்டமிழக்க செய்ததாகவும் அப்போது ஹர்பஜன், ரிக்கி பாண்டிங் விக்கெட்டை கொண்டாடிய போது பாண்டிங் ஹர்பஜனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இதனை ரிக்கி பாண்டிங் மறந்துவிட்டாரா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் 2008 டெஸ்ட் போட்டியின் போது ஹர்பஜன் ஆட்டம் இழந்தவுடன் ரிக்கி பாண்டிங் அவரை வம்பு இழுத்து சண்டை போட்டதும் மறந்து விட்டாரா என்றும் அடுக்கடுக்காக ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதேபோன்று 2008 டெஸ்ட் போட்டியின் போது ஸ்லீப்பில் நின்று கொண்டு இது அவுட்டு தான் என நடுவருக்கு ரிக்கி பாண்டிங் சைகை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி வரலாறு முழுவதும் பல கேடி வேலைகளை ரிக்கி பாண்டிங் செய்து விட்டு தற்போது நல்லவர் போல் வேஷம் போடுவது நியாயமா என்று ரசிகர்கள் பாண்டிங்கை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் செய்ததில் தான் தற்போது விராட் கோலி அவர்களுக்கு மீண்டும் செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Story first published: Thursday, December 26, 2024, 17:30 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+