Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ரன்னை கூட எடுக்க மாட்டாங்க.. இந்திய அணியை மட்டம் தட்டிய பாண்டிங்.. பொங்கிய ரசிகர்கள்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்டில் இந்திய அணி 407 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி 200 ரன்களை கூட எட்டாது எனக் கூறி இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

இதைக் கண்டு இந்திய ரசிகர்கள் கோபத்தில் அவரை விளாசி வருகின்றனர்.

இந்தியா நிலை

இந்தியா நிலை

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 94 ரன்கள் பின்தங்கி இருந்தது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய அணி எளிதாக ரன் குவித்தது. அப்போது இணையத்தில் ரசிகர்கள் பாண்டிங்கிடம் கேள்வி எழுப்பினர்.

பாண்டிங் சொன்ன பதில்

பாண்டிங் சொன்ன பதில்

ஆஸ்திரேலிய அணி எவ்வளவு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதில் அளித்த பாண்டிங் தற்போது ஆஸ்திரேலியா 310 ரன்களை கடந்து முன்னிலையில் உள்ளது. ஆனால், உண்மையில் இந்திய அணி 200 ரன்களை கூட எடுக்காது என்றார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இந்திய அணியை மிக மோசமாக மட்டம் தட்டியதை கண்டு ரிக்கி பாண்டிங் மீது ரசிகர்கள் கோபம் கொண்டனர். ஆஸ்திரேலிய வீரர்களில் மிக மோசமாக ஏமாற்று வேலை செய்தவர் என அவரை விளாசினர். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 407 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாள் ஆட்டம்

கடைசி நாள் ஆட்டம்

இந்தியா நான்காம் நாள் முடிவில் 98 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. ரோஹித் சர்மா 52, ஷுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹானே, புஜாரா களத்தில் உள்ளனர். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா டிரா செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, January 10, 2021, 16:23 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+