
முதல் இன்னிங்க்ஸ்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 244 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மிகவும் நிதான ஆட்டம் ஆடி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தப்புக் கணக்கு
ஆஸ்திரேலிய அணி எப்போதும் இல்லாத அளவு இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடியது. சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஓவர்களில் அடித்து ஆடலாம் என தப்புக் கணக்கு போட்டனர் அந்த அணி பேட்ஸ்மேன்கள்.

4 விக்கெட்
அதே போல, ஸ்டீவ் ஸ்மித் 29 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச வந்த உடன் அடித்து ஆட முயற்சி செய்தார். ஆனால், தன் விக்கெட்டை இழந்தார். அடுத்து ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், நாதன் லியோன் என நான்கு விக்கெட்களை அள்ளினார் அஸ்வின்.

ரிக்கி பாண்டிங்
இது பற்றி பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங், "ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அஸ்வின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடினார்கள். அவர்கள் அஸ்வினை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவரது பந்துவீச்சில் ரன் குவிக்கலாம் என அவர்கள் எண்ணி, செய்யக் கூடாததை செய்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications