Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உடலில் செலுத்தப்பட்ட 2 ஊசிகள்.. கஷ்டப்பட்டு போராடிய பண்ட்.. வெளியான ரகசியம்.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது உடலில் ஊசி போட்டுகொண்டு கஷ்டப்பட்டு ஆடியதாக இளம் வீரர் ரிஷாப் பண்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

அதிலும் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் கேப்டன்சி பெரிய அளவில் இதில் பாராட்டப்பட்டுள்ளது. இந்திய அணியில் இருக்கும் எல்லா வீரர்களும் அணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது. இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்று பலரும் நினைத்த நிலையில் அஸ்வின் மற்றும் விஹாரியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி தோல்வியை தவிர்த்து ஆட்டத்தை டிரா செய்தது.

ஆட்டம் சிறப்பு

ஆட்டம் சிறப்பு

இந்த போட்டியில் இந்திய வீரர் பண்டின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.அதிரடியாக ஆடிய பண்ட் 97 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். இன்னும் கொஞ்ச நேரம் இவர் ஆடி இருந்தால் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் கூட வென்று இருக்கும்.

 மூன்றாவது மேட்ச் டிரா

மூன்றாவது மேட்ச் டிரா

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இவர் உடலில் கடுமையான வலி இருந்து இருக்கிறது. பேட் கும்மின்ஸ் வீசிய பந்து ஒன்று இவரின் உடலை தாக்கியதில் முதுகில், விலா எலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக பண்ட் கடுமையாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.

 கஷ்டம்

கஷ்டம்

ஆனால் இவர் பாதியில் வெளியேறினால் இந்திய அணி தோல்வி அடைத்தாலும் அடைய வாய்ப்புள்ளதால், உடலில் ஊசி போட்டுகொண்டு ஆடி உள்ளார். வலி தெரியாமல் இருக்க மரப்பு ஊசி போட்டுகொண்டு மைதானத்தில் பேட்டிங் செய்துள்ளார். இரண்டு ஊசிகள் இதனால் இவருக்கு போடப்பட்டுள்ளது.

வலி

வலி

இதனால் போட்டிக்கு பின் இவர் மிகவும் சோர்வாக உணர்ந்து உள்ளார். வலியால் மிக கடுமையாக இவர் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஊசி போட்டு அன்று விளையாடினேன், இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் இருந்திருந்தால் இந்திய அணியை வெற்றிபெற வைத்து இருப்பேன் என்று பண்ட் பேட்டி அளித்துள்ளார்.

Story first published: Monday, January 25, 2021, 11:10 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+