Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை டீம்ல எடுத்தது தப்பு.. வாய்ப்பை இழக்கும் இளம் வீரர்.. என்ன காரணம்?

சிட்னி : இந்திய அணியில் இருந்து இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட உள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாஹாவும், வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இந்த முறை தவறு என பலரும் கூறி வரும் நிலையில், ரிஷப் பண்ட் சொதப்பலாக ஆடி தன் இடத்தை தானே இழக்கப் போகிறார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

முதல் டெஸ்டில் விரிதிமான் சாஹாதான் விக்கெட் கீப்பராக ஆடினார். ஆனால், அவர் பேட்டிங்கில் அணிக்கு உதவவில்லை. இந்த நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அணியின் விக்கெட் கீப்பராக பங்கேற்றார்.

சொதப்பல்

சொதப்பல்

அவர் இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் ஓரளவு ரன் எடுத்தார். ஆனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி கொடுத்த இரண்டு எளிய கேட்ச்களை தவறவிட்டார் ரிஷப் பண்ட்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அப்போது அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதை அடுத்து விரிதிமான் சாஹாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அவர் தற்போது ஆடி வரும் விக்கெட் கீப்பர்களில் சிறந்த வீரராக இருக்கிறார்.

மாற்றம்

மாற்றம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விரிதிமான் சாஹாவை ஆட வைக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், சிட்னி டெஸ்ட் போட்டியின் முடிவைப் பொறுத்தே அந்த முடிவு அமையும்.

Story first published: Friday, January 8, 2021, 20:31 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+