IND vs AUS- பண்ட் காலி! அடுத்தடுத்து 3 விக்கெட் போச்சு! எவ்வளவு இலக்கு வைத்தால் வெற்றி பெறலாம்?
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இந்தியா இழந்து இருக்கிறது. பெர்தில் நடைபெற்ற வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி 104 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடியது. குறிப்பாக கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தனர்.

78 ரன்களில் ராகுல் வெளியேற அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 161 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இந்த சூழலில் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் லயன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதைப் போன்று துருவ் ஜூரலும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் 313 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி ஜெயஸ்வால், பண்ட் என அடுத்த எட்டு ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 321 ரன்களில் 5 விக்கெட் இழந்தது. அப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 367 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கின்றது. விக்கெட்டுகள் அவ்வளவு சீக்கிரமாக கிடைப்பதில்லை. இதனால் ஆஸ்திரேலிய வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக கடைசி இன்னிங்ஸில் எவ்வளவு ரன்களை வெற்றி இலக்காக நியமிக்க வேண்டும் என்ற குழப்பம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால் இதே பெர்தில் உள்ள பழைய வாக்கா மைதானத்தில் 414 ரன்கள் என்று இலக்கை தென்னாபிரிக்க அணி வெற்றிகரமாக துரத்தி இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால், ஆஸ்திரேலிய வீரர்களும் நிலைத்து நின்று விளையாடிவிட்டால் இந்த இலக்கை சேஸ் செய்ய முடியும். இதனால் இந்திய அணி 500 ரன்கள் இலக்கை நிர்ணயித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது.
ஆனால் தற்போது இந்திய அணி இன்னும் 400 ரன்களை கூட தொடவில்லை. இந்த சூழலில் பண்ட், துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்திருப்பது கொஞ்சம் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விராட் கோலி கையில் மீண்டும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை நிர்ணயித்தால் தான் மட்டுமே இந்திய அணி பயமின்றி இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications