Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது அடுத்த தோனியா? தம்பி வீட்டுக்கு கிளம்புங்க.. அதிர வைத்த கோலி.. இளம் வீரருக்கு நேர்ந்த கதி!

சிட்னி : இந்திய அணியில் அடுத்த தோனி என புகழப்பட்ட ஒரு வீரர் மொத்தமாக அணியில் இருந்தே புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளம் வீரருக்கு ஆஸ்திரேலியாவில் பயிற்சிப் போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கவில்லை கேப்டன் விராட் கோலி.

அவர் தற்போது அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.

யார் அந்த வீரர்?

யார் அந்த வீரர்?

அந்த இளம் வீரர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். அவர் தோனி அணியில் இடம் பெற்ற போதே சில ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். டெஸ்ட் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக கூட அவர் இருந்தார்.

இடம் மறுப்பு

இடம் மறுப்பு

ஆனால், தொடர்ந்து மோசமாக அவுட் ஆகியும், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியும் வந்த அவரை அணியில் இருந்தே நீக்க முடிவு செய்தார் கேப்டன் கோலி. ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

ரிஷப் பண்ட்டுக்கு பதில் கேஎல் ராகுல் குறைந்த ஓவர் போட்டிகளுக்கான அணிகளில் முதன்மை விக்கெட் கீப்பர் என்ற இடத்தை பிடித்துள்ளார். அவரை தாண்டி ரிஷப் பண்ட் அணியில் நுழைவது இனி சாத்தியமில்லை. ராகுல் கீப்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலோ, அவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டும் தான் பண்ட் பற்றி தேர்வுக் குழு சிந்திக்கும்.

டெஸ்ட் அணி நிலை

டெஸ்ட் அணி நிலை

டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ள ரிஷப் பண்ட் அதிலும் தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளார். விரிதிமான் சாஹாவுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பண்ட் பார்ம் மோசமான நிலையில் இருப்பதே இதற்கு காரணம்.

சாஹா பார்ம்

சாஹா பார்ம்

சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் சுமாராகவே ஆடினார். விரிதிமான் சாஹா டெஸ்ட் வீரர் என அறியப்பட்டாலும், ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி மிரள வைத்தார். நல்ல பார்மில் இருந்தார்.

பயிற்சிப் போட்டியில்..

பயிற்சிப் போட்டியில்..

இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் முதல் போட்டியில் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். ஒரு வீரரைத் தவிர.. அவர் ரிஷப் பண்ட்!!

அரைசதம்

அரைசதம்

அந்த அளவுக்கு ரிஷப் பண்ட்டுக்கு அணியில் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இந்த பயிற்சிப் போட்டியில் சாஹா பங்கேற்றார். அவர் முதல் இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் அரைசதம் கடந்து 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உள்ளூர் போட்டிகள்

உள்ளூர் போட்டிகள்

சாஹா அரைசதம் அடித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம் கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது. பண்ட் இனி உள்ளூர் போட்டிகளில் ஆடினால் மட்டுமே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் நுழைய முடியும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, December 9, 2020, 22:00 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+