Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்திலேயே படுமோசமான ரெக்கார்டு.. அதிர்ச்சி அளித்த இளம் இந்திய வீரர்!

சிட்னி : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உலகிலேயே படுமோசமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.

அவர் ஆடத் துவங்கிய 2018ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை கோட்டை விட்ட விக்கெட் கீப்பர்

சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் மூன்று ஓவர்களில் இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தார்.

வாய்ப்பு கொடுத்த பண்ட்

வாய்ப்பு கொடுத்த பண்ட்

சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக ஆடிய வில் புகோவ்ஸ்கிக்கு இதுவே அறிமுகப் போட்டி. அவர் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், அவர் இரண்டு முறை கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பண்ட் கோட்டை விட்டார்.

இரண்டு கேட்ச்கள் நழுவல்

இரண்டு கேட்ச்கள் நழுவல்

அதுவும் மூன்று ஓவர்கள் இடைவெளியில் ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டு வெறுப்பேற்றினார். இந்திய டெஸ்ட் அணியில் விரிதிமான் சாஹா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தாலும், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரின் இரண்டாவது போட்டி முதல் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

பேட்டிங்

பேட்டிங்

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சாஹாவை விட சிறந்தவர் என்ற அடிப்படையில் வாய்ப்பு பெற்றுள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட்டின் டெஸ்ட் புள்ளிவிவரம் ஒன்று வெளியானது. அதன்படி 2018ஆம் ஆண்டு முதல் சராசரியாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை கோட்டை விட்ட வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

எத்தனை கேட்ச்?

எத்தனை கேட்ச்?

2018இல் பண்ட் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டு முதல் குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட வீரர்களை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு போட்டிக்கு 0.86 கேட்ச்களை கோட்டை விட்டு முதல் இடத்தில் இருக்கிறார் ரிஷப் பண்ட். சிறந்த விக்கெட் கீப்பரான சாஹாவை புறக்கணிப்பது தவறு என இந்த புள்ளிவிவரம் சுட்டிக் காட்டி உள்ளது.

Story first published: Thursday, January 7, 2021, 18:26 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+