Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா டீமில் இடமில்லை? உயிரைக் கொடுத்து செஞ்சுரி அடித்த பண்ட்.. கடைசி ஓவரில் 22 ரன்.. தரமான சம்பவம்

சிட்னி : இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்காது என கூறப்பட்டு வந்த நிலையில் அதை ஒரே இன்னிங்க்ஸில் மாற்றி இருக்கிறார் அவர்.

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவர் ஆடிய ஆட்டத்தை கண்டு கேப்டன் கோலி முதல் ரசிகர்கள் வரை மிரண்டு போனார்கள்.

இரண்டாம் நாளின் கடைசி ஓவரில் சதத்தை எட்ட வேண்டும் என முடிவு செய்து ஒரே ஓவரில் 22 ரன்கள் குவித்து மிரட்டினார்.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்று இருந்தார். ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் வாய்ப்பை இழந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றே கூறப்பட்டது.

நல்ல விக்கெட் கீப்பர்

நல்ல விக்கெட் கீப்பர்

மேலும், அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா திறமை அடிப்படையில் நல்ல விக்கெட் கீப்பராக கருதப்பட்டார். தற்போது ஆடி வரும் விக்கெட் கீப்பர்களில் உலகிலேயே சிறந்த கீப்பர் என்ற பெயரை பெற்றுள்ளார். அவர் பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருந்தார்.

முதல் போட்டியில் வாய்ப்பே இல்லை

முதல் போட்டியில் வாய்ப்பே இல்லை

இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் இந்திய வீரர்கள் பயற்சிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் முதல் பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அப்போதே அவருக்கு இனி இடம் கிடைக்காது என கூறப்பட்டது.

சாஹா அரைசதம்

சாஹா அரைசதம்

அந்த முதல் பயிற்சிப் போட்டியில் விரிதிமான் சாஹா அரைசதம் அடித்து இருந்தார். அதன் மூலம் அவர் பார்மை மீண்டும் நிரூபித்தார். ரிஷப் பண்ட்டுக்கு அதனால் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது அரிது என பேச்சு எழுந்தது.

ஒரே ஒரு வாய்ப்பு

ஒரே ஒரு வாய்ப்பு

இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. இது அவருக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என கருதப்பட்டது. இந்தப் போட்டியில் பண்ட் பெரிய இன்னிங்க்ஸ் ஆடினால் மட்டுமே அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதை உணர்ந்தாலும் பண்ட் முதல் இன்னிங்க்ஸில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அப்போது ரிஷப் பண்ட் குறித்து விமர்சனம் எழுந்தது. இரண்டாம் இன்னிங்க்ஸில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி இன்னிங்க்ஸ்

கடைசி இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸில் மயங்க் அகர்வால் 61, ஷுப்மன் கில் 65, ரஹானே 38 ரன்கள் எடுத்தனர். ஆறாம் வரிசையில் அவர் பேட்டிங் செய்தார். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆடினர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

ஹனுமா விஹாரி நிதானமாக ஆடி சதம் அடித்தார். ரிஷப் பண்ட் இரண்டாம் நாளின் கடைசி ஓவருக்கு முன் 67 பந்துகளில் 81 ரன்கள் குவித்து இருந்தார். கடைசி ஓவரில் சதம் அடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்த அவர் அந்த ஓவரில் 4, 4, 6, 4, 4 என வரிசையாக ஐந்து பவுண்டரி அடித்து 22 ரன்கள் குவித்து சதத்தை எட்டினார்.

அணியில் இடம்?

அணியில் இடம்?

73 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார் ரிஷப் பண்ட். இந்த அதிரடி ஆட்டத்தால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஏற்கனவே, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர் என்பதால் சாஹாவை முந்தி போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

Story first published: Saturday, December 12, 2020, 20:07 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+