Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே இவரை டீமை விட்டு தூக்க முடியாது.. சீனியர் வீரருக்கு நேர்ந்த கதி.. இந்திய அணி ட்விஸ்ட்!

மும்பை : இந்திய அணியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை மோசமான நிலையில் இருந்தார் இளம் வீரர் ரிஷப் பண்ட்.

அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறுவதே சந்தேகம் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால், அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி மூத்த வீரரான விரிதிமான் சாஹாவுக்கு முடிவு கட்டி உள்ளார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட் கடந்த இரு ஆண்டுகளாக சுமாராக ஆடி வந்தார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஓரளவு ரன் எடுத்த அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல தவறுகள் செய்து கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தார்.

அணியில் இடம் இல்லை

அணியில் இடம் இல்லை

அவரது பேட்டிங், விக்கெட் கீப்பிங் என இரண்டுமே விமர்சனத்துக்கு உள்ளானது. பலரும் அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என கூறி வந்தனர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியில் சேர்க்கப்படவில்லை.

சாஹா செயல்பாடு எப்படி?

சாஹா செயல்பாடு எப்படி?

டெஸ்ட் அணியில் மட்டுமே மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா தான் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இதை அடுத்து அணியில் வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் 3 போட்டிகளில், 5 இன்னிங்க்ஸ்களில் 274 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் பண்ட் தான். நான்கு போட்டிகளிலும் ஆடிய வீரர்களைக் காட்டிலும் அவர் அதிக ரன்களைக் குவித்தார்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

மேலும், சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ததிலும், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற வைத்ததிலும் அவர் பங்கு மிக அதிகம். அவர் அடித்த இரண்டு அதிரடி அரைசதம் தான் ஆஸ்திரேலிய அணியை பின்னடைவை அடைய வைத்தது.

நிரந்தர இடம்

நிரந்தர இடம்

இந்த நிலையில், ரிஷப் பண்ட் இனி இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பெறுவார் என கூறப்படுகிறது. சாஹா இனி மாற்று வீரராக சில காலம் அணியில் இடம்பெற வேண்டிய நிலை ஏற்படும். பண்ட் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முழுவதுமாக அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, January 20, 2021, 19:19 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+