Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மச்சான் டார்கெட்டை நான் பார்த்துக்குறேன்.. கடைசி டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம்!

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா டிரா செய்யும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

கடைசி நேரத்தில் விக்கெட் வீழ்ந்த போது கூட பலரும் இந்தியா டிரா நோக்கி செல்லும் என எண்ணினர்.

பவுண்டரிகள்

பவுண்டரிகள்

ஆனால், அதிரடி ஆட்டம் ஆடிய ரிஷப் பண்ட்டுடன் இணைந்த வாஷிங்க்டன் சுந்தர் தன் பங்குக்கு சில பவுண்டரிகளை அடித்து இலக்கை வேகமாக எட்ட காரணமாக இருந்தார். அப்போது அவர்கள் இடையே நடந்த உரையாடல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் பிரிஸ்பேன் போட்டியின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என கூறினார். 265 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்த நிலையில் களத்துக்கு வந்த வாஷிங்க்டன் சுந்தர் 328 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதில் உறுதியாக இருந்தார்.

டார்கெட்

டார்கெட்

ரிஷப் பண்ட்டிடம் தொடர்ந்து, "மச்சான்.. நான் டார்கெட் நோக்கி ஆடுகிறேன்" என கூறி இருக்கிறார் வாஷிங்கடன் சுந்தர். அதையே ரிஷப் பண்ட்டும் கூறி இருக்கிறார். அதன் பின் யாராவது ஒருவர் நிலைத்து ஆட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

சுந்தர் அபாரம்

சுந்தர் அபாரம்

அப்போது, சுந்தர் தான் அடித்து ஆடுவதாகவும், பண்ட்டை நிலைத்து ஆடுமாறும் கூறி இருக்கிறார். சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். அவர் ஆட்டமிழந்தாலும் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. பண்ட் இந்தப் போட்டியில் 89 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Story first published: Monday, January 25, 2021, 18:00 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+