Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- இந்த 2 வீரர்கள் மீது எந்த நெருக்கடியும் இல்லை.. முழு சுதந்திரம் இருக்கு- ரோகித் சர்மா

மெல்போர்ன் : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக 90 ஆயிரம் டிக்கெட்டுகள் முதல் நாளில் மட்டும் விற்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ்க்கு மறுநாளான பாக்ஸிங் டே என்று அழைக்கப்படும் எந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக உழைத்து வருகின்றனர். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ind vs aus shubman gill border gavaskar trophy india vs australia

ஜெய்ஸ்வால் பெர்த் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் எடுத்த பிறகு அவரும் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் போன்ற ஒரு வீரர் அருகில் இருக்கும் போது அவருடைய உத்வேகத்தையும் மனதையும் குலைக்கும் விதமாக நாம் எதுவும் செய்யக்கூடாது. அவர்களை சுதந்திரமாக நாம் விட வேண்டும்.

அப்படி செய்! இப்படி செய் என்று அவர்கள் மனதை நாம் சுமைகளை ஏற்றக்கூடாது. அவருக்கு என்ன பேட்டிங் வரும் என்று மற்றவர்களை விட அவர்களுக்கு தான் நன்றாக தெரியும். இங்கே இருக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் மைதானமும் ஒவ்வொரு சவால்களை கொடுக்கும். அந்த சவால்களுக்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக்கொண்டால் மட்டுமே சிறப்பாக விளையாட முடியும்.

பவுலர்களுக்கும் இதே சவால்கள் தான். எனவே ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எதிராக தனித்தனி திட்டங்களை தீட்டி அதனை களத்தில் செயல்படுத்த வேண்டும். சுப்மன் கில்லை பொறுத்தவரை அவர் திறமை வாய்ந்த வீரர். அவருடைய தரம் என்ன என்று அனைவருக்குமே தெரியும். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த வீரருக்கு நாம் கொஞ்சம் ஆதரவு அளிக்க வேண்டும்.

நாங்கள் கில்லுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப் போவதில்லை. இந்த இரண்டு வீரர்களுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி பெரிய ரன்களை குவிப்பது என்று நன்றாகவே தெரியும். 30, 40 ரன்கள் எடுத்தால் அதனை பெரிய இலக்காக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.இதுதான் ஆஸ்திரேலியாலில் மிகவும் கடுமையான பணியாக நினைக்கின்றேன். மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

Story first published: Tuesday, December 24, 2024, 17:32 [IST]
Other articles published on Dec 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+