Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BGT தொடரில் அதிக வெற்றி- பாண்டிங்கை முந்த போகும் ரோகித்.. முதலிடம் கோலி கிடையாது! யார் தெரியுமா?

அடிலெய்ட்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தற்போது அணிக்கு திரும்பி இருக்கிறார். ரோகித் சர்மா இல்லாத நிலையில் பும்ரா தலைமையிலான இந்திய அணி பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தான் கேப்டன் ஆக செயல்பட போகிறார். இந்த நிலையில் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

border gavaskar trophy india vs australia test match

இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு வெற்றி மட்டும் பெற்றால் கூட புதிய ரெக்கார்டை ஹிட் மேன் படைப்பார். அதாவது பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக வெற்றியைப் பெற்ற கேப்டன் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடிப்பார்.

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியாவுக்கு எதிரான 11 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ரோஹித் சர்மா ஒரு டெஸ்டில் வென்றால் அவரைப் பின்னுக்கு தள்ளி விடுவார். இந்த பட்டியலில் இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தான் முதலிடத்தில் இருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் தோனி 13 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அணியை எட்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வைத்து முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் ரகானே, கவாஸ்கர், கங்குலி, விராட் கோலி ஆகியோர் அடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த இந்திய அணி கேப்டன் ஆக கருதப்படும் நிலையில் இந்த பட்டியலில் அவருக்கு முன் தோனி, ரஹானே, ரோகித் சர்மா ஆகியோர்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இருக்க காரணம் விராட் கோலி 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 27, 2024, 9:30 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+