Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: அதிவேக அரைசதம்.. யாரும் பக்கத்தில் கூட வர முடியாது.. ரோகித் சர்மா பெயரில் எழுந்துங்கோ!

செண்ட் லூசியா : டி20 உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பையில் தொடக்கம் கிடைத்தும் விக்கெட்டை எளிதாக விட்டுக் கொடுக்கிறார் என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், ரோகித் சர்மாவின் ஆட்டம் பதிலடியாக அமைந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 206 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார்.

t20 world cup IND vs AUS indian national cricket team

இந்த டி20 உலகக்கோப்பையில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் ரோகித் சர்மா விக்கெட்டை கொடுத்து வந்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். ஒரே ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி ஆஸ்திரேலியா அணியை டிஃபென்சிவ் ஆட்டத்திற்கு தள்ளினார்.

பவர் பிளே ஓவர்களிலேயே அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அடிக்கும் 2வது அரைசதம் இதுவாகும். இதன் மூலமாக இந்த டி20 உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் அமெரிக்கா வீரர் ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 2வது இடத்திலும், அதன்பின் டி காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணியின் ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்து 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் 26 பந்துகளில் அரைசதம் அடித்து 5வது இடத்தில் உள்ளனர்.

அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பையில் பவர் பிளே ஓவர்களுக்குள் அரைசதம் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா தான். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதமும் இதுதான். மேலும் இந்த போட்டியில் 92 ரன்களை எட்டியதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 19 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Story first published: Monday, June 24, 2024, 22:30 [IST]
Other articles published on Jun 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+