Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமேலும் பொறுக்க முடியாது.. 4 மூத்த வீரர்களை இந்திய அணியில் இருந்து நீக்க முடிவு.. பிசிசிஐ அதிரடி

மும்பை: இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு மூத்த வீரர்களையும் நீக்குவதற்கு பிசிசிஐ கெடு விதித்து இருக்கிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாக முன்னேறவில்லை என்றால் அத்துடன் இந்த நால்வரின் எதிர்காலம் முடிவுக்கு வரும் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இந்திய மண்ணிலேயே தோல்வி அடைந்து இருக்கிறது. அதிலும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

ind vs aus india australia

அதனால் பிசிசிஐ கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் மிகக் கடினமான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதுவே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கடைசி தொடர்.

இந்த தொடரில் நான்கு போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்பதால் கிட்டத்தட்ட நான்கு மூத்த வீரர்களின் எதிர்காலமும் முடிவுக்கு வந்து விட்டதாகவே பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நால்வரில் விராட் கோலியை அணியில் இருந்து நீக்குவது மட்டும்தான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். ஏனெனில், அவருக்கு தற்போது 35 வயது தான் ஆகிறது. அவர் உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கும் நிலையில் அவரை அணியில் இருந்து நீக்குவது அத்தனை எளிதான விஷயமாக இருக்காது.

எனினும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை என்றால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்களும் நிச்சயமாக இந்திய அணியில் இடம்பெற மாட்டார்கள் என கூறப்பட்டு இருக்கிறது.

Story first published: Monday, November 4, 2024, 8:20 [IST]
Other articles published on Nov 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+