இந்தியன் டீம் வருது.. வெளியே கிளம்புங்க.. ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்ட உள்ளூர் டீம்!
சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றுள்ளது. அங்கே இரண்டு மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.
இந்திய அணி வருகையை ஒட்டி சிட்னியில் உள்ளூர் அணி ஒன்றை ஹோட்டலில் இருந்து வெளியேற்றி இருக்கும் சம்பவமும் நடந்துள்ளது.

ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த தொடரின் முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலியா கிளம்பத் தயார் ஆனது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் ஆடாத வீரர்களும் துபாய் சென்றனர்.

இந்திய அணி சென்றது
இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த மறுநாள் இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது. சிட்னி நகரத்தில் இந்திய வீரர்கள் இறங்கினர். அந்த நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இந்திய வீரர்கள் குவாரன்டைன் மற்றும் பயிற்சி செய்ய உள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் ஹோட்டல்
இதற்காக நியூ சவுத் வேல்ஸ் அரசு இந்திய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வர அனுமதி அளித்துள்ளது. அங்கே புல்மேன் என்றார் ஹோட்டலில் இந்திய வீரர்கள் இரண்டு வாரம் குவாரன்டைன் செய்து கொள்ள உள்ளனர்.

வெளியேறிய உள்ளூர் அணி
அந்த ஹோட்டலில் தான் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி அணி எப்போதும் தங்குவார்கள். தற்போது இந்திய அணிக்கு இடம் அளிக்க வேண்டும் என்பதால் அவர்களை வெளியேற்றி வேறு ஹோட்டலில் தங்க வைத்துள்ளனர். இது உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications