Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS : கதை முடிஞ்சது ஹார்டி.. ருதுராஜ் செய்த செயல்.. விக்கெட் எடுத்த பவுலருக்கு நேர்ந்த கதி

கவுஹாத்தி : இளம் ஆஸ்திரேலிய ஆல் - ரவுண்டர் ஆரோன் ஹார்டி முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவரது அடுத்த இரண்டு ஓவர்களில் சரமாரியாக ரன் அடித்து கதற விட்டார் ருதுராஜ் கெயிக்வாட்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெயிக்வாட் துவக்கம் அளித்தனர்.

ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பின்னர் ருதுராஜ் கெயிக்வாட் - சூர்யகுமார் யாதவ் இணைந்து நிதானமாக ஆரம்பித்து பின் அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினர். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய இளம் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

IND vs AUS : Ruturaj Gaikwad score more runs in Aaron Hardie overs after he take Suryakumar yadav wicket.

தனது இரண்டாவது ஓவரில் சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தி இருந்த ஆரோன் ஹார்டிகு இதுவே முதல் சர்வதேச டி20 விக்கெட். உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேனை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்தார் ஹார்டி. இரண்டு ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில், அதே உற்சாகத்தோடு 14 வது ஓவரை வீச வந்தார். விக்கெட் எடுப்பார் என்ற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் இவரை பந்து வீச அழைத்து இருந்தார். அந்த ஓவரில் ருதுராஜ் கெயிக்வாட் இரண்டு ஃபோர், திலக் வர்மா ஒரு ஃபோர் அடிக்க 19 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

மீண்டும் 18வது ஓவரை ஆரோன் ஹார்டி வீசினார். அந்த ஓவரை சந்தித்த ருதுராஜ் கெயிக்வாட் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் எடுத்தது இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் ஒரு விக்கெட் எடுத்ததற்கு தண்டனையாக அடுத்த இரு ஹார்டி ஓவர்களில் ருதுராஜ் கெயிக்வாட் அதிரடியால் இந்திய அணி 44 ரன்கள் சேர்த்தது.

ஆரோன் ஹார்டி 4 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து இருந்தார். சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆண்ட்ரூ டையுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஹார்டி. இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெயிக்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் குவித்து தன் முதல் டி20 போட்டி சதம் அடித்தார்.

Story first published: Tuesday, November 28, 2023, 21:13 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+