Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்.. இந்தியா ஏ அணி அறிவிப்பு.. ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கேப்டன் பொறுப்பு!

மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா சீனியர் அணிக்கு எதிரான 3 நாட்கள் பயிற்சிப் போட்டிக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், அபிமன்யூ ஈஸ்வரன் துணைக் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் முதல் ஜனவரி முதல் வாரம் வரை நடக்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தகுதி பெறுவதற்கு இந்த டெஸ்ட் தொடரில் சில வெற்றிகளை பெறுவது அவசியமாகியுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ind vs aus ruturaj gaikwad csk

இந்த டெஸ்ட் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாற்று தொடக்க வீரரை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுவினர் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா ஏ அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அக்.31ஆம் தேதியும், 2வது போட்டி நவ.7ஆம் தேதியும் நடக்கவுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி வீரர்கள், இந்தியா ஏ அணியுடன் 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 போட்டிகளில் விளையாடவுள்ள இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் துலீப் டிராபி, இராணி கோப்பை மற்றும் ரஞ்சி டிராபி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

அதேபோல் அனுபவ வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேச டி20 தொடரில் அறிமுகமான ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் இருந்து நீண்ட நாட்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியா ஏ அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யூ ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, தேவ்தத் படிக்கல், ரிக்கி பூய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், அபிஷேக் போரெல், முகேஷ் குமார், கலீல் அஹ்மத், யாஷ் தயாள், நவ்தீப் சைனி, தனுஷ் கோட்டியான், மானத் சுதார்.

Story first published: Monday, October 21, 2024, 23:21 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+