Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உங்க வேலைய மட்டும் பாருங்க”.. அஸ்வினை வைத்து வம்பிழுத்த ஆஸி, ஊடகம்.. சாபா கரீம் தரமான பதிலடி!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வம்பிழுத்த சூழலில் முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

ஒரு போட்டியே முடிந்துவிட்ட சூழலிலும் ஆஸ்திரேலியாவின் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் குறையாமலேயே இருந்து வருகிறது. இந்த முறையும் பிட்ச் தான் அவர்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திற்கு மாற்றிவிட்டனர். உலகக்கோப்பைக்காக தரம்சாலாவில் புணரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சர்வதேச போட்டியை நடத்துவதற்கு தகுதி இல்லை எனக்கூறி இந்தூருக்கு மாற்றியுள்ளனர்.

அஸ்வினின் சாதனை

அஸ்வினின் சாதனை

இந்தூர் மைதானம் ரவிச்சந்திரன் அஸ்வினின் கோட்டை என்றே கூறலாம். ஏனென்றால் அங்கு விக்கெட் எடுப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாகும். ஒட்டுமொத்த டெஸ்டில் அஸ்வின் சராசரியாக 24 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட் எடுக்கிறார். ஆனால் ஹோல்கர் மைதானத்தில் மட்டும் 12.50 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட் எடுக்கிறார் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனை வைத்து தான் ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டு வருகிறது. இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போட்டியை மாற்றுகின்றனர் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சாபா கரீம் பதிலடி

சாபா கரீம் பதிலடி

இந்நிலையில் இதற்கு முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஃபாக்ஸ் கிரிக்கெட் எப்போதுமே தேவையில்லாத விஷயங்களை தான் செய்கிறது. போட்டி நடைபெறும் மைதானங்கள், எதிரணியின் வீரர்கள் குறித்து இப்படி பேசிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக உற்சாக குரல் கொடுக்கலாம். அவர்களுக்கு நம்பிக்கை தரும் படி தகவலை வெளியிடலாம்.

ரொட்டேஷன் பாலிசி

ரொட்டேஷன் பாலிசி

ரொட்டோஷன் பாலிசி மூலம் தான் பிசிசிஐ போட்டிகளை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். தரம்சாலாவில் பிரச்சினை ஏற்பட்டால் இந்தூர் மைதானம் தான் சரியானது. இதனால் தான் அங்கு மாற்றியுள்ளனர். ஆஸ்திரேலியா வெறும் 4 மைதானங்களை வைத்துக்கொண்டு அதிலேயே டெஸ்ட் போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது.

பல ஸ்டேடியம்கள்

பல ஸ்டேடியம்கள்

இந்தியாவில் பல்வேறு மைதானங்கள் கிரிக்கெட்டிற்காக உள்ளன. அதுவும் பல்வேறு மாநிலங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்ற மைதானங்களை உருவாக்கிவிட்டு, காத்துக்கொண்டுள்ளனர். இப்படி இருக்கையில் அனைத்து மைதானங்களுக்கும் போட்டியை நடத்தும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். அதற்காக தான் இப்படி முடிவெடுக்கப்படுகிறது என சாபா கரீம் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 15, 2023, 18:10 [IST]
Other articles published on Feb 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+