மெல்போர்ன் : இந்தியா ,ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இரு அணிகளும் கடுமையாக மோதி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் சில ஓவர்களில் பொறுமை காத்த ஆஸ்திரேலிய ஜோடி அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய 19 வயது வீரரான ஷாம் கோன்ஸ்டாஸ் ஸ
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் டி20 கிரிக்கெட் விளையாடுவது போல் பும்ராவின் பந்துவீச்சை பின்னால் தூக்கி சிக்சர் அடித்தார்.
அதன் பிறகு தாம் ஒரு திறமையான வீரர் என்றும் உங்கள் பந்துவீச்சை பார்த்து எனக்கு பயம் இல்லை என்ற எண்ணத்தில் ஷாம் கோன்ஸ்டாஸ் களத்தில் நின்று கொண்டிருந்தார். இந்திய வீரர்களை பார்த்து ஏளனமாக சிரிப்பது போன்ற வேலையிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பந்து பேட்டிற்கு வேகமாக வருகிறது. இதனை பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக ரன் குவிக்கிறார்கள் என்பதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா திடீரென்று ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார்.
இதை அடுத்து ஜடேஜா வழக்கம்போல் ஷாம் கோன்ஸ்டாஸ் அடிக்க முடியாத வகையில் ஸ்டெம்பை நோக்கியே பந்தை வீசினார். அப்போது கோன்ஸ்டாஸ் பந்தை தடுப்பதற்காக முயற்சி செய்தபோது, பந்து பேட்டில் பட்டது. இதன் அடுத்து கோன்ஸ்டாஸ் எல் பி டபிள்யூ ஆனார். அதிரடியாக விளையாடி வந்த கோன்ஸ்டாஸ் தனியாலாக நின்று சதம் அடித்து இந்தியாவின் கதையை முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். உஸ்மான் கவஜா, ஷாம் கோன்ஸ்டாஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19.2 ஓவர்கள் எல்லாம் 89 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.