Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

21 ஆண்டுகளுக்கு முன்பு சேவாக்கை பார்த்தது போல் இருந்தது.. கோன்ஸ்டாஸ் நொறுக்கிட்டாரு! ஆஸி.வீரர் பாராட்டு

மெல்போர்ன் : இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடியதை பார்க்கும்போது 21 ஆண்டுகளுக்கு முன்பு சேவாக் ஆடிய ஆட்டம் போல் இருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீர ஜஸ்டின் லாங்கர் பாராட்டி இருக்கிறார்.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ind vs aus virat kohli sam konstas boxing day test vs

யாருமே எதிர்பார்க்காத வகையில் அறிமுக வீரராக களம் இறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தார். 52 பந்துகளில் அரைசதம் அடித்த கோன்ஸ்டாஸ் பும்ரா ஓவரில் பவுண்டரி, சிக்சர் என 18 ரன்கள் பறக்க விட்டார். இந்த நிலையில் கான்ஸ்டாஸ் 65 பந்துகளை எதிர் கொண்டு 60 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கோன்ஸ்டாஸ் இன்னிங்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், கான்ஸ்டாசின் ஆட்டம் தம்மை பிரமிப்பில் ஆழ்த்திருப்பதாக கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்த போட்டிக்கு முன்பு போன் கோன்ஸ்டாஸ் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் நிறைய விஷயங்களை பலரிடம் பேசினார்.

தற்போது பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் அவர் காட்டிருக்கிறார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் எங்களுக்கு எதிராக 233 பந்துகளில் 195 ரன்கள் குவித்தார். ஷேவாக் தனி ஆளாக எங்களை சுக்கு நூறாக உடைத்தார். அவருடைய நம்பிக்கையை பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.

தற்போது கோன்ஸ்டாஸ் ஆட்டத்தை பார்க்கும் போது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. கோன்ஸ்டாசின் இந்த அதிரடி ஆட்டம் மூலம் உஸ்மான் கவாஜா மீதான அழுத்தம் குறைந்து இருக்கிறது.கவாஜா பெரும்பாலும் வார்னருடன் தான் விளையாடுவார். வார்னர் அதிரடியாக ஆடும் போது கவாஜா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்ப்பார். தற்போது அதே போல் ஒரு அதிரடி பார்ட்னர் கவஜாவுக்கு கிடைத்து இருப்பதால் அவர் மீதான நெருக்கடி குறைந்து இருக்கிறது என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 26, 2024, 9:04 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+